காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

 


ஜம்மு, ஜன.25 ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் சுந்தர்பானி செக்டாரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி கடந்த 18-ஆம் தேதி பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது.

அதில் படுகாயமடைந்த ராணுவ வீரர் நிஷாந்த் சர்மா, உதம்பூர் மாவட் டத்தில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஏற்கெனவே கடந்த 1, 21-ஆம் தேதிகளில், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத் தக்கது. காஷ்மீரில் கடந்த 18 ஆண்டு களிலேயே அதிகபட்சமாக, கடந்த ஆண்டு 5 ஆயிரத்து 100 முறை பாகிஸ் தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி யிருக்கிறது.

அதில் 24 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 36 பேர் கொல்லப்பட்டிருக் கின்றனர். 130-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கின்றனர்.

Comments