போராட்டத்தை சீர்குலைத்து, விவசாயிகள் சங்கத் தலைவர்களை கொல்லச் சதி.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 24, 2021

போராட்டத்தை சீர்குலைத்து, விவசாயிகள் சங்கத் தலைவர்களை கொல்லச் சதி....

விவசாயிகள் சங்கத் தலைவர்கள் குற்றச்சாட்டு....

புதுடில்லி, ஜன.24 விவசாயிகள் சங்கத்தின் தலைவர் களில் 4 பேரைக் கொன்று, டிராக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர் குலைவையும் உருவாக்க சதித் திட்டம் நடக்கிறது என்று விவசாயிகள் சங்கத் தலை வர்கள் குற்றம்சாட்டியுள் ளனர்.

விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டில்லி மாநில எல்லைகளில் பல் வேறு மாநில விவசாயிகள் கடந்த 60 நாட்களாக போராட்டம்நடத்தி வருகின் றனர். 

11-ஆவது சுற்றுப் பேச்சு வார்த்தையில் மத்திய அரசு, விவசாயிகளின் கோரிக் கையை ஏற்கவில்லை. இந் நிலையில் வெள்ளியன்று இரவு சிங்கு எல்லையில் விவ சாயிகள் சங்கத்தினர் சார்பில் நடத்திவந்த போராட்டத்தில் முகமூடி அணிந்த ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான முறை யில் இருப்பதைப் பார்த்து அவரைப் பிடித்தனர். அவரி டம் விவசாயிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகின. பிடிபட்ட அந்த நபரை வைத்துக்கொண்டு, விவசாயிகள் சங்கத் தலை வர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விவ சாயிகள் சங்கத் தலைவர் குல்வந்த் சிங் சாந்து கூறு கையில், நாங்கள் போராடும் போராட்டக் களத்தில் முக மூடி அணிந்த ஒருவரைப் பிடித்துள்ளோம். அந்த நபரை அரியானா காவல் துறையிடம் ஒப்படைத்துள் ளோம்.

நாங்கள் நடத்தும் போராட் டத்தைச் சீர்குலைக்க சதி நடப்பதாக நாங்கள் கருதுகி றோம்.  போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் தலை வர்கள் 4 பேரைக் கொலை செய்யவே அந்த நபர் வந் துள்ளார். அதுமட்டுமல்லா மல் ஜனவரி 26 ஆம் தேதி டில்லியில் விவசாயிகள் சார்பில் நடக்கும் டிராக்டர் பேரணியைச் சீர்குலைக்கவும் சதி நடக்கிறது.டில்லி காவல் துறையினர் மீது அந்த நபர்துப்பாக்கிச் சூடு நடத்தி, டிராக்டர் பேரணியைச் சீர் குலைக்கவும், இதன் மூலம் போராடும் விவசாயிகள் மீது காவல்துறையினர் பதில் தாக் குதல் நடத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது என அந்த நபர் கூறினார் என்று குல்வந்த் சிங் தெரிவித்தார்.

No comments:

Post a Comment