மத்திய அஞ்சல் துறை தேர்வுகள் தமிழில்: அனைவருக்கும் நமது பாராட்டுகள்!

மத்திய அஞ்சல் துறை தேர்வுகள் எழுத தமிழ் புறக்கணிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து தமிழ்நாட்டில் கிளம்பிய எதிர்ப்பால், மத்திய அரசு புதியதோர் ஆணை பிறப்பித்து, தமிழிலும் தேர்வு எழுதலாம் என்று தெரிவித்துள்ளது. இதை வரவேற்கிறோம். எதிர்ப்புக்குரல் கொடுத்து தமிழ் மொழியின் உரிமையை நிலை நாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.


கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

16.1.2021

Comments