பண்பாட்டு படையெடுப்பை முறியடிக்க ஏற்க வேண்டிய சூளுரை

கி. வீரமணி

திராவிட - தமிழ் இனத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் களில் தலையாய தாக்குதல் - பண்பாட்டு நாகரிகம், மொழி, வாழ்வியல்மீது ஏற்பட்ட தாக்கு தல்கள் தான்.

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர் கள் எழுப்பிய சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் இதோ:

1. தமிழனுக்கு காலத்தைக் காட்டக்கூடிய சொல், சாதனம், அமைப்பு இவைதான் என்று காட்டத்தக்க சான்று ஆவணங்கள் - தரவுகள் இன்று நம் கையில் உண்டா ?

2. கிறிஸ்துவர்கள் காலத்தைக் காட்ட கிறிஸ்துவ ஆண்டு (கி.பி. இருக்கிறது. முஸ் லிம்கள் காலத்தைக் காட்ட (ஹிஜ்ரி) இருக் கிறது. இதுபோல தமிழருக்கு என்ன விருக் கிறது?

3. தமிழனுக்கு கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் என்ப வைகளைக் கண்டு, கூற மிகவும் தேடி அலைய வேண் டியுள்ளதே -ஏன்?

4. விழாக் கொண்டாட்டம் என்பதில் கூட தமிழர் விழா, திராவிடர் திருநாள் என்று மதமோ, மூடநம்பிக்கையோ புராண இதிகாசப் புரட்டுகளோ அன்றி விழா உண்டா ? 'பண்டிகை' என்பதே வடமொழி, வடக்கே இருந்து இறக்குமதி ஆன ஆரியச் சரக்குகள்தானே?

5. தமிழருக்குரிய விழா என்று பொங்கல் விழாவை நான் 1930- களிலேயே சுமார் 40 ஆண்டுக ளுக்கு முன்பே கூறினேன்; மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம். நான் அதை ஒரு அறுவடைத் திருவிழா' (பிணீக்ஷீஸ்மீst திமீstவீஸ்ணீறீ) என்ற அடிப்படையில் இயற்கையை ஒத்த - அறிவுக்கு ஏற்ற விழா என்ற நோக்கில்தான் கூறினேன். நமது (திராவிடர் இயக்கம்), அதனை மக்களிடையே மிகவும் பிர பல மாக்கியது!

இதுவும் தமிழர் தம் தனிப்பண்பாட் டினை - உழவுக்கு முதல் மரியாதை செய்யும் விழாவாக ஆக்கியதை - மாற்றிய பண்பாட் டுப் படையெடுப்பு ஏற்பட்டுவிட்டதே அதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா?

பொங்கல் விழாவை 'சங்கராந்தி' எனவும், 'இந்திர விழா' என்றும் திரிபுவாதம் செய்து வடவர் -- ஆரியர்' - கலாச்சாரத்தின் சாயத் தைப் பூசிவிட்டார்கள்!

"பார்ப்பனர் இதை மதசம்பந் தமான விழாவாக ஆக்குவதற்காக விவசாயம், வேளாண்மை, அறுவடை ஆகிய கருத் தையே அடிப் படையாகக் கொண்டு இதற்கு 'இந்திரன் பண்டிகை' என்றும், அதற்குக் காரணம் வேளாண் மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன். ஆதலால் இந்தி ரனைக் குறிப்பாய் வைத்து விவசாயத்தில் விளைந்து வேளாண்மையாகிய தைப் பொங்கி மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத் துப் பூசிப்பது என்று கதைகட்டி விட்டார்கள்!

இந்தக் கதையை இவ்வளவோடு விட்டு விடவில்லை !

இம்மாதிரியான இந்திர விழா வைப் பற்றி கிருஷ்ணன் பொறாமைப்பட்டு, தனக் கும் அந்த விழாவை (பூசையை) நடத்த வேண்டுமென்று மக்களுக்குக் கட்டளை இட்டதாகவும், மக்கள் அந்தப்படி செய்த தாகவும், இந்த இந்திர விழா, கிருஷ்ண மூர்த்தி விழாவாக மாறியது கண்டு இந் திரன் கோபித்து, ஆத்திரப்பட்டு இந்த கிருஷ்ணமூர்த்தி விழா ஈடேறாமல், நடை பெறாமல் போகும் பொருட்டு பெரிய மழையை உண்டாக்கி விழாக் கொண்டாடு வோர், வேளாண் மைக்கு ஆதரவாக இருந்த கால் நடைகள், ஆடு மாடுகள் அழியும் வண்ணமாக பெரும் மழையாகப் பெய்யச் செய்து விட்டான் என்றும், இதற்கு ஆளான மக்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று முறையிட்டதாகவும், கிருஷ்ண மூர்த்தி ஆடு மாடுகளையும் காப் பாற்ற ஒரு பெரிய மலையைத் தூக்கி அதனைத் தனது சுண்டு விரலால் தாங்கிப் பிடித்துக் காப் பாற்றியதாகவும், இதனால் இந்திரன் வெட்கமடைந்து கிருஷ்ணனிடம் தஞ்சம் அடைந்து தனது மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாக வும், அதற்கு இரங்கி கிருஷ்ணன், 'எனக்கு ஒரு நாள் பண்டிகை, உனக்கு ஒரு நாள் பண்டிகையாக, மக்கள் முதல்நாள் எனக் காகப் 'பொங்கல் பண்டிகை'யாகவும், பொங்கலுக்கு மறு நாள் 'மாட்டுப் பொங்கல்' என்று கொண்டாடும்படியும் 'ராஜி' செய்து கொண்டார்கள் என்றும் எழுதப்பட்டு கதைகட்டி விடப் பட்டது ஆரியர்களால்,

இதைவிட சிரிப்பிற்கிடமான - முட்டாள் தனமான கதைகள் வேறு இருக்கமுடியுமா?

இதில் அறிவுக்குப் பொருத்த மான செய்தி ஏதாவது ஒன்று உண்டா ?

6. பிறவி ஆதிக்கக்காரர்கள் எந்தக்காரி யம் எப்படியிருந்தா லும், யார் எக்கேடு கெட்டாலும் தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத, ஆராய்ச்சியைப் பற்றி சிந்திக் காத முட்டாள் களாகவும், காட்டு மிராண்டிகளாகவுமே இருக்க வேண்டுமா?

அதற்கு அடிமைத் தனத்தை ஆணிய டிக்கும் கருவிகளாக பண்டிகைகளை, விழாக்களைப் பயன் படுத்துவதா?

இதற்காக வெட்கப்பட வேண்டாமா தமிழர்கள்? இந்த பண் பாட்டு, கலாச்சாரப் படையெ டுப்பை முறியடித்து, நம்மை, நமது கலை, நாகரிகம், பண்பாட்டை முழுது முணர்ந்திடும் வகையில் நாம் விழாக் கொண்டாட்டங் களை நடத்த வேண்டாமா?

இந்தக் கேள்விகளுக்குச் சரி யான விடையாகத் தான் இந்தப் பொங்கல் திருவிழா நமக்குக் கிடைத்துள்ளது!

தமிழனின் - திராவிடனின் மூச்சுப் பயிற்சி -உடற்பயிற்சிக்கலை. (மொகஞ்சதாரோ, அரப்பா என்ற நகரங்களின் சிந்து வெளி நாகரிகத்திலிருந்ததே), இதை திரா விட நாகரிகத்தின் குறியீடுகள் என்பதை அடியோடு சமஸ்கிருதம் என்ற மொழிச் சொற்களாக்கி, பிராணாயாமம்', 'யோகா சனம்' அது பதஞ்சலி முனிவரால் கொண்டு வரப்பட்டது என்று கூறப்பட்டுள்ளதே.

திராவிடரின் - தமிழரின் - ஆடற்கலை சதுர் கச்சேரி - 'பரத நாட்டியமாகி' வடக்கே பரத முனிவர் மூலம் வந்தது என்று கூறி நிலை நிறுத்திட இதற்கெனவே ஒரு கூட்டம் - பார்ப்பன ஊடகங்கள் பலத்த முயற்சியில் இறங்கி இன்று அயராமல் பணியாற்றி வரவில்லையா?

ஏன், தமிழே கூட சமஸ்கிருதத்தின் வழி வந்தது என்று வள்ளலார் (இராமலிங்கர்) காலத்திலேயே சங்கராச்சாரியார்கள் நிறு விட முயலவில்லையா?

கருநாடக இசையின் ஆதி மும்மூர்த்தி களாக முத்துத்தாண்டவர்  மாரிமுத்தாப் பிள்ளை அருணாசலக்கவிராயர் இவர் களை மறைத்து விட்டு, 1. தியாகய்யர்வாள் 2. சாமா சாஸ்திரி) 3. முத்துசாமி தீட்சதர்

இவர்களைத்தானே முன்னோடியாக்கி சற்குரு விழாக்கள் நடைபெறுகின்றன!

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி யும், உலக அளவில் புகழ்பெற்றவருமான தமிழர் ஒருவரிடம் சென்ற ஆண்டு நான் சந்தித்துப் பேசியபோது, அவருக்கே இந்த விவரம் தெரியவில்லை என்பதை அறிய முடிந்தது!

வயலில் இறங்கியே அறியாத, வேளாண் மையே பாவகரமானது என்று கூறும் மனுவின் கலாச்சாரத்தில் ஊறித் திளைத்த பூணூல் அய்யர்கள் தானே உலகம் அறிந்த "வேளாண் விஞ்ஞானிகள்" - விளம்பர சடகோபம் அவாளுக்குத்தானே?

தமிழ் மொழிக்குத் தனித்த பெருமை சேர்ப்பதோடு, தமிழர்களுக்குக் கிடைத்த முன்னோடி அற நூல் இலக்கியமான 'திருவள்ளுவரின் திருக்குறள் என்ற உலகப் பொது நூலைப் பரப்பிட திராவிடர் இயக்கம் பெரியாருக்குப் பின்னால் - வெகு மக்களி டையே  எவரே இருந்தனர்? இல்லையே!

இராமாயணக் காலட்சேபங்கள், பாரதப் பிரசங்கங்கள், கீதை உபன்யாசங்கள், இத் தியாதி, இத்தியாதி! வான் புகழ் வள்ளுவத் திற்கு இந்த வரிசையில் இடம் உண்டா ?

வள்ளுவரின் குறள் போன்ற அறிவு, ஒழுக்கம், பண்பு, பொதுத் தொண்டு, தொண்டறம், இனிய இல்லற வாழ்வு போன் றவைகளை வாழ்வியல் பாடங்களாகச் சொல்லித் தருபவைகளா, இராமாயணமும் பாரதமும் கீதையும்?

இப்பொங்கல் புதுநாளில் தமிழர்கள் ஏற்கவேண்டிய சூளுரை ஒன்று உண்டு.

எந்தக் காரணத்தைக் கொண்டும் நமது பண்பாட்டு அழிவை முன்னிறுத்தும் கலை யையோ இலக்கியத்தையோ விழாவையோ நாம் நம் வாழ்வில் ஏற்க மறுப்போம்!

"மனுவின் மொழி அறமான தொருநாள்- - அதை

மாற்றி அமைக்கும் நாளே தமிழர் திருநாள்"

- புரட்சிக் கவிஞர்

'பழையன கழிந்து புதியன புகுந்து' என்பதைப் படிப்பதோடு நிறுத்திவிடாமல்,

'புதியன புகுத்தலும் பழையன இறுத் தலும்' என்று ஒரு இரட்டை வேடம் போடா மல், குப்பைகளை மூலையில் போட்டு, பிறகு வீட்டுக்கு வெளியே போட்டு எரிப்பது போல், நம் மூளையில் புகுந்த குப்பைகளை மூலையில் எறிந்து, நம் முன்னேற்ற வாழ்வை உருவாக்குவோம்!

Comments