கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர திராவிடர் கழகத்தின் சார்பில் ’மயக்க பிஸ்கெட்டு'கள் ஓர் எச்சரிக்கை நூல் வழங்கும் நிகழ்ச்சி பண்ருட்டி ஒன்றிய கழக தலைவரும் ஜோதி போட்டோ ஸ்டுடியோ உரிமையாளருமான தோழர் கோ.புத்தன் தலைமை யில் நடைபெற்றது.
ஜெயங்கொண்டத்தில்
தமிழ் மக்களே காவிகளை புரிந்து கொள்ளுங்கள் 'மயக்க பிஸ்கெட்டு'கள் ஓர் எச்சரிக்கை நூல் 30.12.2020அன்று காலை ஜெயங்கொண்டம் கடைவீதியில் வழங்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் கே.பி.கலியமூர்த்தி,
வழக்குரைஞர் மு.இராசா, ஒன்றிய
செயலாளர் துரை.பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு வழங்கினர்.