சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதில்லையா?

கடைந்தெடுத்த பொய் -இதோ ஆதாரம்!

 கலி. பூங்குன்றன்

ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆகம விதிகள் உள்ளன. அதன்படி சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் போகக் கூடாது என்பது காலம் காலமாக இருந்து வரும் சம்பிரதாயம் என்று சத்தம் போடு கிறார்களே - அது உண்மைதானா?

உண்மையன்று என்பதற்கு இதோ ஆதாரங்கள்.

சபரிமலை அய்யப்பன் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கும் ஒரு கடவுளாம். 10 முதல் 50 வயதிலான பெண்கள் மாதாந்திர விலக்கு ஆகும் காரணத்தால் அது புனித மற்ற தன்மை என்றும் அதனால் கோவி லில் தீட்டு உண்டாகக் கூடும் என்றும், அய்யப்பனின் பிரம்மச்சரியத்திற்கு ஒவ் வாத  செயல் என்றும் கதைக்கிறார்கள்.

தமிழகத்தின் கிராமங்கள் தோறும் அய்யனார் காவல் தெய்வமாக  கொண்டு இருப்பதைப் போலவே ஆரியங்காவு பகுதியில் இருந்த அய்யப்பன் கோவிலும் முன்னொரு காலத்தில் எல்லைக் காவல் தெய்வமாகக் கொண்டு - சிறு தெய்வ வழிபாட்டில் முக்கிய பங்கு வகித்த தெய் வமாக இருந்தது. வழிபாடுகளில் இரண்டு கடவுள்களுக்கும் அதிக அளவில் ஒற்று மைகள் இருக்கின்றன. பழங்குடிகளின் ஊர்க்காவல் தெய்வமாக இருந்த இக் கோவில் பிற்காலத்தில் உயர் ஜாதி மலையாள இந்துக்களாலும், பந்தளம் ராஜ குடும்பத்தாலும் பராமரிக்கப்பட்டு, இக் கோவிலின் நிர்வாகத்தினை அவர்களே ஏற்று நடத்தத் தொடங்கினார்கள்.

தமிழகம் மற்றும்  கேரளத்தில் இருக் கும் பல்வேறு அய்யப்பன் கோயில்களில் அய்யப்பன் திருமணமான கடவுளாகவே காட்சி அளிக்கிறார். உதாரணம்: அச்சன் கோவில். கோவை போன்ற கேரளத்தை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் இருக்கும் அய்யப்பன் கோவில்களில் பெண்கள் வழிபட முழு உரிமையும் இருக்கிறது என் பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சபரிமலையில் பெண்கள் நுழையக் கூடாது என 1972ஆம் ஆண்டு தான் தேவசம்போர்டு தடை விதித்தது. அதற்கு முன்பு வரை ஆண்களைப் போலவே பெண்களும் சென்று அய்யப் பனை வழிபட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1972இல் தடை விதிக் கப்பட்டாலும் பெரிதாக நடைமுறைப்படுத் தப்படவில்லை. அப்போது பெண்கள் உள் ளிட்ட பலர் சென்றுவர சரிவர பாதை யில்லாத காரணத்தால் தார்சாலை ஒன்றும் அமைக்கப்பட்டது, அந்தச்சாலையில்தான் அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி சென்றார். 1986ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்ப்படம் அந்த கோவில் சன்னிதானத்தில் படமாக்கப்பட்டி ருக்கிறது.  (அதில் பெண்களும் உண்டு) இதற்காக 7,500 ரூபாய் கட்டணத்தையும் பெற்றிருக்கிறது தேவசம் போர்டு.

N.S. Madhavan

@NSMlive

• 29 Sep 2018

How old are ‘very old’ customs of Sabarimala? Entry of women to the shrine was banned by law only as late as 1972. Reason: some male worshippers took offence. Before that women used to go there for worship, more so, after roads were built for a Rashtrapathi

அதன் பின்னாளில் இருந்தே பெண் கள் இக்கோவிலுக்கு வருவதில்லை. ஆனால் ஆதிகாலத்தில் இருந்தே சோறுண் ணும் சடங்கிற்காக பெண்கள் இந்தக் கோவிலிற்கு வருவது வழக்கமான ஒன் றாகும்.

1939ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ராணியாக இருந்தவர் அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்தி யிருக்கிறார் என்பதற்கான சான்றுகளும் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.  முன்னாள் பிரதமரின் செயலாளர் டி.கே. நாயரின் அனுபவம் என்ன கூறுகிறது?

1972ஆம் ஆண்டிற்கு முன்பு வரை குறிப்பிட்ட வயது பெண்களுக்கு கோவி லுக்குள் அனுமதி இல்லை என்ற ஒரு சட்டம் கிடையாது. இந்தியாவில் இருக்கும் மற்ற கோவில்களைப் போலவே இங்கும் பெண்கள் வந்து வழிபாடு செய்து வந்த னர். முன்னாள் இந்திய பிரதமர் மன் மோகன் சிங்கின் முன்னாள் செயலாளராக பணியாற்றி வந்த டி.கே. நாயர் இது குறித்து கூறுகையில், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் முதன்முறை யாக சபரி மலை சென்ற போது நான் என் அன்னையின் மடியில் அமர்ந்திருந்தேன். அன்று எடுத்துக் கொண்ட நிழற்படம் இன்றும் எங்களிடம் இருக்கிறது என்று கூறியுள்ளார். அவர் காட்டிய அந்த நிழற் படத்தில் ஒரு இளம்பெண்  கருவறையில் இருக்கும் கடவுளை வேண்டிக் கொண் டிருப்பதாக இருந்தது.

Women started arriving, though in spare numbers, at the temple as vehicles became available up to Pampa. They often arrived for the choroonu, or first meal to a child, offering which started at the temple mast was erected and sanctified.

பெண்கள் கோவிலுக்கு தலைமை யேற்று வரிசை வரிசையாக வந்தார்கள். அப்போது ஜீப்புகளில் பெண்கள் வருவது முண்டு, பெண்கள் தங்களின் குழந்தை களை அழைத்துக்கொண்டு வருவார்கள். நடைதிறப்பு நாள்களில் அய்யப்பனுக்குச் சோறூட்டும் நிகழ்ச்சியில் பெண்கள் தான் முதலில் கலந்துகொள்வார்கள்.

The Devaswom Board had issued orders in November 1972 forbidding the entry of females aged 10 to 50 as Lord Ayyappa is celibate. The High Court later tightened the rule after a couple of trespassing incidents by women

அதன் பிறகு 1972ஆம் ஆண்டு தேவசம் போர்டு திடீரென  10 முதல் 50 வரையிலான பெண்கள் வர தடைவிதித்து விட்டது, அப்போது இந்தத் தடை பெரிய எதிர்ப்பாக கிளம்பவில்லை. காரணம் கோவிலுக்கு வருபவர்கள் பெரும்பாலும் சாதாரண வீட்டுப்பெண்கள், ஆகையால் அவர்களுக்கு ஊடகம் மற்றும் இதர பெரிய அமைப்புகளின் ஆதரவு கிடைக் காமல் போய்விட்டது.

கடைசியாக ஒரே ஒரு கேள்வி. உருவ மற்ற கடவுளுக்கு ஆண்-பெண் வேறு பாடு உண்டா? கடவுள் பரம் பொருளா? ஆணா, பெண்ணா, அலியா?

- ‘விடுதலை', 31.10.2018

Comments