பெங்களூரு, ஜன. 22- கருநாடக மாநிலம் பெங்களூரு பெரியார் நகரில் 8.12.2020 அன்று மறைவெய்திய தர்மலிங்கம் துணைவியாரும் வெண்மலர் வரதராசனின் தாயாருமாகிய எல்லம்மாள் அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 27.12.2020 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு
கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன் தலைமையில் நடைபெற்றது. பெரியார்
நகர் பள்ளித் தாளா ளர் வெண்மலர் வரதராசன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்வில்
முதலா வதாக 101வயது பெரியார் நாடக செம்மல் வீ.மு.வேலு, எல்லம்மாள் அவர்களின் ஒளிப்படத்தினை
திறந்து வைத்தார். அனைவரும் வீர வணக்கம் குரலெழுப்பினர். நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர் கள் காணொலி வாயிலாக எல்லம்மாள் பற்றிய நெடிய நினைவேந்தல் உரை நிகழ்த்
தினார்கள். பெரியார் நகரில் தொடக்க கால நிகழ்வு தொடங்கி இந்நாள் வரை கழகத் தோழர்களை
நினைவு கூர்ந்ததாக உரை இருந்தது.
அடுத்து அய்.ராசன்,
தங் கம் இராமச்சந்திரன், தென் னவன், வேளாங்கண்ணி, இள.பழனிவேல், வாசுதேவன், சி.சக்கரவர்த்தி,
அமுத பாண் டியன், பிராங்கிளின், இராம மூர்த்தி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர், செழியன்
சம்பத் ஆகியோர் எல்லம் மாள் அவர்களின் வாழ்வி ணையர் நிகழ்வுகளை நினைவு கூர்ந்து நினைவேந்தல்
உரை நிகழ்த்தினர். நிறைவாக பெரியார் நகர் பள்ளி நிர்வாகியும், எல்லம்மாள் அவர்களின்
மருமகனும், கழக வட மண்டல செயலாளரு மான சி.வரதராசன் ஏற்புரை யுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.