குடுமிகளுக்குள் குரைப்பும் - குடுமிச் சண்டையும்.. மின்சாரம்

                                                     திராவிட இயக்கத்தைப்பற்றியும், திராவிடர் கழகத்தைப்பற்றியும், அதன் தலைவர் ஆசிரியர்பற்றியும், தி.மு..பற்றியும், தளபதி மு..ஸ்டாலின்பற்றியும் ஏதாவது கிறுக்காவிட்டால் கிறுக்கர் குருமூர்த்தி அய்யர்வாளுக்குக் கிஞ்சிற்றும் தூக்கம் வரவே வராது போலும்! அப்படிப்பட்ட ஃபோபியா அவரின் குடுமியையும், பூணூலையும், சங்கராச்சாரியாரிசத்தையும் பிடித்து ஆட்டிக் கொண்டே இருக்கிறது.

இன்று வெளிவந்துள்ளதுக்ளக்'கில் (13.1.2021, பக்கம் 29) கடைசிக் கேள்வி.

கேள்வி: பெரியார் காலத்து தி..; வீரமணி காலத்து தி.. என்ன வேறுபாடு?

பதில்: பெரியார் காலத்து தி..வைக் கண்டு தி.மு.. நடுங்கியது. வீரமணி காலத்து தி.., தி.மு..வைக் கண்டு நடுங்குகிறது.

இந்தப் பதிலில் வார்த்தைகள் உண்டே தவிர, ஏதாவது அர்த்தம் உண்டா? காரண காரியம் உண்டா?

தி..வும் - தி.மு..வும் இரட்டைக் குழல் துப்பாக் கிகள். ஒன்று சமூகப் புரட்சிக்கான இயக்கம் - இன்னொன்று தி..வின் கொள்கைகளை ஏற்று அரசியலில் ஈடுபட்டு, ஆட்சிமூலமாகக் கூடு மானவரை அவற்றைச் செயல்படுத்தும் கட்சி.

எடுத்துக்காட்டு: சுயமரியாதைத் திருமணம், இருமொழி மட்டுமே தமிழ் நிலத்தில், தமிழ்நாடு என்ற பெயர் சூட்டல், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, பெரியார் நினைவு  சமத்துவபுரம், பெண்களுக்குச் சொத்துரிமை, சமூகநீதி... இத்தி யாதி.... இத்தியாதி...

இவை ஒவ்வொன்றையும் எதிர்த்த கூட்டம்தான் குருமூர்த்தி பார்ப்பன வகையறாவைச் சேர்ந்தது.

இந்த நிலையில், ஆரியத்துக்கே உரிய சிண்டு முடியும், மித்திர பேத வேலையை - தி.. - தி.மு..வுக்கு இடையே செய்து பார்க்கிறது.

ஆரியம் என்னென்ன வகைகளில் எல்லாம் சிந்திக்கும், செயல்படும் என்பதைஆரிய மாயை' யில் அறிஞர் அண்ணா அலசு அலசு என்று அலசித் தூர எறிந்ததும் உண்டு. நம்மிடையே இந்தப்பாச்சா' பலிக்குமா?

தி.மு..வை கண்டு தி.. நடுங்குகிறதாம்.

தி..விடமிருந்தும், வீரமணியிடமிருந்தும் தி.மு.. தலைவர் ஸ்டாலின் விலகி நிற்கவேண்டும் என்று எத்தனையோ முறை குருமூர்த்தி எழுதி, பேனாவின் மை தீர்ந்ததுதான் மிச்சம்!

தளபதி மு..ஸ்டாலின் பலத்த அடி கொடுத்தும், முன் குடுமிகளுக்குப் புத்தி வரவில்லையே, என்ன செய்வது?

‘‘நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்!''

(‘முரசொலி', 2.12.2018).

திராவிடர் கழகம் ‘‘நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் வழி காட்டும் தாய்!''

(தஞ்சையில் தளபதி மு..ஸ்டாலின் உரை, 24.2.2019).

‘‘திராவிடர் கழக பவள விழா மாநாடு நமக்குப் பயிற்சிக் களம்!''

(‘முரசொலி', 27.8.2019).

இவைதான் தி.மு..வைக் கண்டு தி.. நடுங் குகிறது என்றுதுக்ளக்' பஞ்சாங்கத்தின் பொருளா?

கேள்வி: ‘காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந் திரர்பற்றி ஜெயலலிதாவிடம் தவறாக எடுத்துக் கூறி, சிறையில் சிக்க வைத்தவர் என்று சுப்பிரமணியன் ஸ்வாமி உங்களைக் குறி வைத்து ஹிந்து தமிழ்ப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். அவர் உங்களைப்பற்றி பலமுறை இப்படி அலட் சியமாக பேசியுள்ளார். நீங்கள் இதுவரை அவரைப் பொருட்படுத்தியதில்லை. ஆயி னும் இந்த அவதூறுக்கு உங்கள் பதில் என்ன?

பதில்: அவதூறுக்குப் பதில் கூறக் கூடாது என்று எனக்குக் கூறியதேசோ'தான். ‘நாம் ஒழுங்காக இருக்கும் வரை அவதூறு என்பது நாய் குலைப்புதான்' என்பார் அவர். அவதூறால் மனம் புண்பட்டாலும், அதைப் புறக்கணிப்பதுதான் நல்லது, புத்திசாலித்தனமும்கூட.

(‘துக்ளக்', 30.12.2020, பக்கம் 26)

30 ஆம் தேதிதுக்ளக்'கில் சுப்பிரமணியன் ஸ்வாமியைநாய்' என்று கூறிய, (அதில்கூட குரைப்பதற்கும், குலைப்பதற்கும் வேறுபாடு தெரியாத எழுத்தாளர் இவர்) அதே சாமிநாதன் குருமூர்த்தி, இருவார இடைவெளியில் இன்று வந்ததுக்ளக்'கில் (13.1.2021, பக்கம் 26, 27) என்ன எழுதுகிறார்?

கேள்வி: பெரியவரின் ஆசிபெற்ற குருமூர்த்தி, பெரியவரின் ஆசிபெற்ற சுப்பிரமணியன் ஸ்வாமி ஒற்றுமை - வேற்றுமை என்ன?

பதில்: ‘‘உனக்கு அரசியல் வேண்டாம்'' என்று ஆசியளித்து ராஜ்ய சபைக்குப் போகாமல் என்னைத் தடுத்து ஆட்கொண்டார் பெரியவர். ‘‘நீ அரசியலில் இரு'' என்று ஆசி கூறி, டாக்டர் சுப்பிரமணியன் ஸ்வாமியை அரசியலில் ஈடுபட வைத்தவர் அவர்.இது எங்களிடையே வேற்றுமை - ஒற்றுமை.

நாங்கள் இருவருமே பெரியவரின் ஆசி பெற்றவர்கள்.

இதுதான்துக்ளக்' பதில்!

எப்படி இருக்கிறது?

நாய்' என்று ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டவர்கள், சங்கரமடம் என்ற ஒரு புள்ளியில் ஒன்று சேர்கிறார்களே, பார்த்தீர்களா?

சங்கராச்சாரியாரை சிறையில் தள்ளக் காரண மாக இருந்தவருக்கு சங்கராச்சாரியாரின் ஆசியா?

இது என்ன லாஜிக்?

குடுமிகளுக்குள் குடுமிப்பிடிச் சண்டை வந்தால், ஒருவர் வண்டவாளம் இன்னொருவரால் தண்டவாளம் ஏறும். சங்கர மடத்துக்குள்ளேயே சீனியருக்கும், ஜூனியருக்கும் சண்டை வர வில்லையா?

தெரிந்துகொள்வீர் பார்ப்பனரை!

Comments