தொ. பரமசிவன் - வாழ்க்கைக் குறிப்புகள்

பெரியாருடன் தொ.பரமசிவன்

பேராசிரியர் முனைவர் தொ. பரம சிவன் (1950 - திசம்பர் 24, 2020) தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய் வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த தொ. பரமசிவன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். ஆறாண் டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னர், காமராசர் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.

ஜாகீர் உசைன் கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரி யராகப் பணியாற்றினார். 1998 முதல் 2008இல் ஓய்வு பெறும் வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற் றினார்.

பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக் கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெரு மைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியா ளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரிய வைத்தவர். எச்சங்களாகவும், மிச் சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரை கள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற் கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.

அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய் வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ் கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலா கவும் இந்நூல் இருக்கிறது.

குடும்பம்

திருநெல்வேலி மாவட்டம், பாளை யங்கோட்டையில் வசித்து வந்த இவரின் மனைவி இசக்கியம்மாள் ஆவார். தொ. பரமசிவன் இசக்கியம்மாள் தம்பதிய ருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

கல்வி

1976இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக சேர்ந்தார்.முனைவர் பட்ட ஆய்வுக்காக புதுமைப்பித்தன் குறித்து ஆய்வு செய்ய விரும்பினார். ஆனால், இவருடைய ஆய்வு நெறியாளர் மு.சண்முகம் பிள்ளை, கோயில் குறித்து ஆய்வுமேற்கொள் ளும்படி கூறவே, மதுரையில் உள்ள அழகர் கோயிலை தனது ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டார்.

இந்தக் கோயில் குறித்து இவர் மேற் கொண்ட ஆய்வு, கோயில் குறித்த ஆய் வின் எல்லைகளை விரிவடையச் செய் தது. இவரது ஆய்வுக் கட்டுரையினை மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் அழகர் கோயில் என புத்தகமாக வெளி யிட்டது.

வழக்கமாக கோயில்கள் குறித்த ஆய்விலிருந்து இவரது அணுகு முறை முற்றிலும் மாறி, அழகர் கோயி லுக்கும் பல்வேறு ஜாதியினருக்கும் இடை யிலான உறவு குறித்ததாக அமைந் தது. தமிழ் மொழியின் மீதும் பெரும் பற்றும் ஆர்வமும் கொண்டிருந்தவராக இருந்த போதும் தன்னுடைய ஆய்வினை செம்மைப்படுத்தும் நோக்கில் சமஸ்கிரு தமும் கற்றார்.

Comments