ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாய அமைப்புகள், சட்டத்தை ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும் என அமைப்பின் தலைவர் திகாயத் தெரிவித்துள்ளார்.

·     நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் துவங்குகிறது.

·     வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளு மன்ற பட்ஜெட் தொடர் துவங்கும் நாளான இன்று குடியரசுத் தலைவர் உரையை 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     சம்யுக்தா கிசான் மோர்ச்சா வியாழக்கிழமை டில்லி காவல்துறையினரின் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் என்றும் ஜனவரி 26 குடியரசு நாளில் நடைபெற்ற வன்முறையைக் காரணம் காட்டி விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாகவும் விவசாயிகளின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

 தி டெலிகிராப்:

வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதவி விலக வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கு வங்க சட்டமன்றத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திர்னாமுல் காங்கிரஸ் கட்சி நிறை வேற்றியது.

மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட், தவறான புள்ளி விவரங்களைத் தந்து சிறப்பான ஒரு தோற்றத்தை தர முயல்வார் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் .சிதம்பரம் அச்சம் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரத்தை மோடி அரசு சிதைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

- குடந்தை கருணா

29.1.2021

Comments