எனக்கிருந்த பெரிய கவலை தீர்ந்தது

20 வருஷமாகத் தலைவர் இல்லாமலிருந்தது. அந்த கட்சி ஏனில்லாமல் இருந்தது என்றால், அண்ணா அந்தக் கட்சியை ஆரம் பித்த போதே இந்தக் கட்சிக்குத் தலைவர் பெரியார் தான், அவர் வருகிற வரை இந்தத் தலைவர் பதவி யாருக்கும் கிடையாது. அவர் வந்து அமருகிறவரை தலை வர் நாற்காலி காலியாகவே இருக் கும் என்று சொல்லிப் பொதுச் செயலாளர் என்கிற பெயரில் கட் சியை நடத்திக் கொண்டு வந்தார். இன்றைக்குத் தான் இந்தத் தலை வர் நாற்காலி பூர்த்தி செய்யப் பட்டது. இந்நிலைக்குத் தேர்தல் நடத்த ஒப்புக் கொண்ட நாவலர் அவர்களையும், கலைஞர் அவர் களையும், பாராட்டுகின்றேன். கட்சி இனி எவ்விதக் கலகமும் இல்லாமல் நடக்கலாம் என்ற நம் பிக்கை இருக்கிறது. எனக்கிருந்த பெரிய கவலை தீர்ந்தது. நம்மு டைய வாழ்வும், நம் எதிர் காலமும் இந்த ஆட்சியிடமே இருக்கின்றது. இவர்களால் தான் தமிழர்களுக்கு நன்மை செய்ய முடியுமே தவிர மற்ற எவராலும் நம் மக்களுக்கு இவ்வளவு நன்மைகள் செய்ய முடியாது.

- 27.7.1969 அன்று சிதம்பரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை’, 4.8.1969)

Comments