தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் - கேள்விகளும்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் நிலை (குரூப் -1) தேர்வில் (3.1.2021) ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 264 பேர் பங்கு கொண்டுள்ளனர். விண்ணப்பித்தவர் களுள் வெறும் 51 விழுக்காட்டினர் மட்டுமே தேர்வு எழுதி யுள்ளனர் என்பது அதிர்ச்சியான தகவலே!

துணை ஆட்சியர், துணைக் காவல்துறைக் கண்காணிப் பாளர்,  வணிக வரித்துறை உதவி ஆணையர் கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளர்கள், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட 66 பதவிகளுக்கான தேர்வு இது.

மொத்தம் 200 கேள்விகளில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன், அயோத்திதாசர், காமராசர், அண்ணா, .பு.. சவுந்தரபாண்டியன் முதலியோர் பற்றி வினாக்கள் இடம் பெற்றுள்ளன.

எடுத்துக்காட்டாக பெரியார் நடத்திய எந்த மாநாட்டில் பெண்கள் சொத்துரிமைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது? முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவர் யார்? 'திராவிடன்' இதழின் ஆசிரியர் யார்? தந்தை பெரியார்  தொடங்கிய 'குடிஅரசு' இதழின் ஆசிரியர் யார்? 'திராவிடப் பாண்டியன்' ஆசிரியர் யார்?

தந்தை பெரியாரின் ஆதரவுடன், ஆட்சி செய்தவர் "தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர் டாக்டராகி ஊசி போட்டதால் எந்த பிள்ளை செத்தது? தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர் பொறியாளராகிக் கட்டிய எந்த பாலம் இடிந்ததுஎன்று பேசிய முதலமைச்சர் யார்? என்பது போன்ற வினாக்கள் இடம் பெற்றிருந்தது பாராட்டத்தக்கதும் வரவேற்கத் தகுந்ததும் ஆகும்.

தமிழ்நாட்டில் பணியாற்றக் கூடியவர்களுக்கு தமிழ் நாட்டைச் சேர்ந்த தகவல்கள் தெரிந்திருக்க வேண்டியது நியாயம்தானே!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டு வரலாறு என்பது நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் தி.மு.., ...தி.மு.. இவற்றை மய்யப்படுத்திச் சுழல்வது தான்.

இதில் பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சி என்பதும், திராவிட இயக்கச் சிந்தாந்தத்தோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றே!

சமூகநீதியின் தத்துவத்தை உள் வாங்கிய காமராசர், ராஜகோபாலாச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து, "கல்வி நீரோட்டம் நாடெங்கும் பாயும்" வகை செய்தவர்.

எப்பொழுதுமே சமூகநீதிக்கு ஆதரவானவர்களை எதிர்ப் பதும், வசைப்பாடுவதும் பார்ப்பனர்களின் போக்காகும். அதனால்தான் காமராசரைப் பார்ப்பன ஊடகங்கள் கேவல மாகச் சித்தரித்தன. ஒரு கட்டத்தில் கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று கூட அடையாளப்படுத்தியதுண்டு. கல்விக் கண் திறந்த காமராசர், இரட்சகர் என்று எல்லாம் தந்தை பெரியார் அவரை உயர்த்தி உச்சிமோந்து பிரச்சாரமும் செய்தார்.

காமராசரும், “பெரியார் அவர்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். அவர்கள் போட்டுத் தந்த பாதையில் கவனமாகப் பயணிக்கிறேன்" என்று கூட வெளிப்படையாகச் சொன்னதுண்டு.

எந்த அளவுக்குக் காமராசர்மீது பார்ப்பனர்களுக்கு வன்மம் இருந்தது என்றால், டில்லியில் பட்டப்பகலில் தீ வைத்துக் கொளுத்திக் கொலை செய்யும் அளவுக்குத் திமிரி நின்றது.

இந்த வரலாறு எல்லாம் தமிழ்நாட்டில் பணியாற்றப் போகும் அரசு அதிகாரிகளுக்கு நியாயமாகத் தெரிந்திருக்க வேண்டியது தானே.

தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் நடத்தும் இத்தகு தேர்வுகளில் இந்தியா முழுவதும் உள்ளவர்கள் பங்கு ஏற்கலாம் என்ற ஒரு தவறான துரோகமான முடிவை ...தி.மு.. அரசு எடுத்தது மன்னிக்கப்படவே முடியாத ஒன்று.

வெளி மாநிலத்தவர்களுக்கு இந்த வினாக்கள் கடினமாக இருந்தால் அது ஒரு வகையில் நல்லதே!

தேர்வாணையம் நடத்திய கேள்வித்தாளில் இடம் பெற்றவை தொடர்பான பாடத் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ளனவா என்று கேட்டால், அது ஒரு முக்கியமான கேள்விக்குறியே!

நீதிக்கட்சி தொடங்கி நிறைவேற்றப்பட்ட வகுப்புரிமை - சமூகநீதி தொடர்பான பாடங்கள் இடம் பெறுவது அவசியம்.

சமூக சீர்திருத்தம் என்ற பகுதி முக்கியமானதல்லவா? - அதற்காகப் பாடுபட்ட தலைவர்கள்பற்றி பாடத் திட்டத்தில் இடம் பெற வேண்டாமா?

அதுவும் சமூகநீதி என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முகவுரையிலேயே வலியுறுத்தப்பட்ட ஒன்றாயிற்றே!

தந்தை பெரியார்தம் வாழ்க்கை வரலாற்றைத் துணைப் பாடமாகவாவது (Non Detail) வைக்க வேண்டாமா?

தேர்வாணைய வினாத்தாளில் கேட்கப்பட்ட வினாக்கள் முக்கியமே - அதே நேரத்தில் அவை தொடர்பான பாடத் திட்டங்கள் அதைவிட முக்கியமாகும் என்பதையும் வலி யுறுத்துகிறோம்.

Comments