ஆசிரியருக்குக் கடிதம் - விடுதலை தான் நமக்கு விடியல்

விடுதலை 14.12.2020 இதழில் வடக்கில் கடுங்குளிர்: இரண்டு காட்சிகள் பாரீர் என்றுஊசி மிளகாய்கட்டுரை புகைப்படங்களுடன் ஆதாரப் பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் அற்புதம்.

.பி.யில் - அயோத்தி போன்ற ஊர்களில் கடுங்குளிர் வாட்டுகிறது - அதனால் இராமனும் அவனது சகோதரர்களும் குளிரால் பாதிக்கப் படக்கூடாது என்று கவலை கொண்டு அவர் களுக்கு கம்பளிப் போர்வை போர்த்தியதோடு, மின்சார வெப்பக்கருவி (Electric Heater)யை வைத்து உள்ளே வெப்பம் ஆக்கியுள்ளார்கள். இதுதி இண்டியன் எக்ஸ்பிரஸ்நாளேட்டில் வந்துள்ள ஆதாரப்பூர்வ செய்தி.

இதனை உலகின் ஒரே பகுத்தறிவு நாளே டானவிடுதலைதான் வெளியிட்டது. மற்ற நாளேடுகளுக்கு வெளியிட அறிவு நாணயமோ பகுத்தறிவு சிந்தனையோ, தைரியமோ இல்லை - அவர்களின் ஒரே குறிக்கோள் மக்களிடம் மயக்க பிஸ்கெட்டுகளை கொடுத்து தங்கள் வியாபார வசூலை பெருக்குவதுதான்.

மேற்கண்ட செய்தியை படிக்கும் போது நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் கடுங்குளி ருக்கு போர்வை, சால்வை இல்லாமல் வாடுகின் றனர். ஆனால் ஒரு கற்சிலைக்கு குளிருக்காக போர்வை போர்த்தும் இந்த மடமைவாதிகள் தான் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வார்களா? நடுநிலையோடு, பகுத்தறிவு சிந்தனையோடு அனைவரும் சிந்திக்க வேண் டிய விடயம்.

விடுதலை தான் நமக்கு விடியல்

விடுதலை தான் பகுத்தறிவு சூரியன்!

- தி..பாலு

பொன்மேனி, மதுரை

Comments