நூல் அரங்கம்

நூல் விமர்சனம் : மொழியைக் கொலை செய்வது எப்படி?

(மொழியும் போராட்டமும்)

 தொகுப்பாசிரியர்அந்திமழை இளங்கோவன்

வெளியீடுஅந்திமழை

விலைரூபாய் 120

அந்திமழைஇதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பேமொழியை கொலை செய்வது எப்படி?” நூலின் தலைப்பாக அமைந்துள்ளது. நூலில் மொத்தம் 22 கட்டுரைகள் அடக்கமாக மூன்று பிரிவுகளில் அமைந்துள்ளது. முதல் பிரிவில்மொழியும் மனிதர்களும்தலைப்புக்குள் 7 கட்டுரைகளும், இரண்டாம் பிரிவில்தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டுஎன்ற தலைப்புக்குள் 7 கட்டுரைகளும், மூன்றாம் பிரிவுகளான, “மொழிப்போர் 75 ஆண்டுகள்பிரிவில் 6 கட்டுரைகளும் அடங்கும். ஒவ்வொரு கட்டுரைகளும் கல்கண்டு போன்று மென்று அசைப் போட முடியும். அளவில் அவ்வளவு நேர்த்தியான தகவல்களை உள்ளடக்கியுள்ளது என்பதனை கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.

தனித்தமிழ் இயக்கம் தொடக்கமும் வரலாறும்என்னும் கட்டுரையில், ஒரு மொழியைப் பேசும் மக்கள் தம் இனத்தாரை விட்டு நீங்காது இருக்கும் வரை, அவர் தம் நாட்டில் வேற்று மொழியாளர் வந்து புகாது இருக்கும் வரை பிறமொழிச் சொற்கள் வந்து கலப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் நெடுங்காலமாகப் பிற நாட்டாருடன் தமிழர் வாணிகத் தொடர்பு கொண்டிருந்ததனால் அவர்களது மொழியோடு பழக்கங்களும், பண்பாடுகளும் தமிழரிடையே கலந்தன. தமிழில் கலப்பு சேர்ந்த காலம் கடைசங்க காலம் எனவும், தமிழில் முதலில் கலந்த மொழி சமஸ்கிருதம் எனவும் .தமிழ்மல்லன் குறிப்பிடுகிறார். மேலும் தமிழகத்தை ஆண்டுவந்த வேற்று மொழி அரசர்களாலும் அவர்களது மொழி சொற்கள் தமிழில் புகுந்தன. பல்லவர், சோழர் ஆட்சியில் வடமொழி, முகம்மதியார் காலத்தில் உருது, பாரசீகம், அரபு, நாயக்கர் காலத்தில் தெலுங்கு, டச்சு, போர்ச்சுகீசியம், பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய அய்ரோப்பிய மொழிகள் முதலியன எல்லாம் தமிழில் கலந்து அதன் தூய்மையை கெடுத்தன என்று அந்தக் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.

துணைநின்ற திராவிட இயக்கம்என்ற கட்டுரையில் தென்னிந்திய நல உரிமைக் கட்சி (நீதிக்கட்சி) தனித்தமிழ் இயக்கம் அன்னிபெசன்ட் தொடங்கிய ஹோம் ரூல் இயக்கம் ஆகியவை இருவேறு இயக்கங்களாக இருந்தாலும், திராவிட இயக்கமும், தனித்தமிழ் இயக்கமும் வரலாற்றில் ஒரு மரத்தின் இரு கிளைகள் என்றே கூறவேண்டும். சமூக நீதியில் திராவிட இயக்கமும், மொழி தூய்மையில் தனித்தமிழ் இயக்கமும் முன்னின்றன என்று அந்தக் கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் ஆய்வுக் கட்டுரையாக அமைந்துள்ளன.


கரிக்கோல் துருவிய காகிதப் பூக்கள் 

ஆசிரியர்கௌதம் நீல்ராஜ்

வெளியீடுஓவியா பதிப்பகம்

17-13 - 11, ஸ்ரீராம் காம்ப்ளக்ஸ்,

காந்தி நகர் மெயின் ரோடு,

வத்தலகுண்டு,

திண்டுக்கல் மாவட்டம்...

பக்கங்கள்: 112

விலை:  ரூ.100/-

இந்நூல் எளிய சொற்களுடன் எழுதப் பட்ட கவிதை நூல். வாசகர்களை வயப் படுத்தும்  ஓசைகளைக் கொண்ட கவிதை களில்  இயற்கை அழகு மிளிர்கிறது.

மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக் கும் இடைப்பட்ட வகையிலான இலக்கிய  பயண அனுபவத்தை வழங்குகிறார்.

பொருள்களில் சூழலியல், விவசாயம், அன்பு, காதல், வறுமை என பல்வேறு இவரது கவிதைகள் மிளிருகின்றன.

ஊடகவியலாளர் ரமேஷ் பிரபா தனது வாழ்த்துரையில் "விவசாய பின் னணியில் இருந்து வருகின்ற ஒரு கிரா மத்து இளைஞனின் சிந்தனை எப் போதுமே இயற்கை மற்றும் சமூகம் சார்ந்ததாகவும் நேர்மையும் ரசனையும் கலந்ததாக இருக்கும் என்பதற்கு கவிஞர் கௌதமன் இவரது கவிதைகள் இன் னும் ஒரு சாட்சி" என்று குறிப்பிடுகிறார்.

இயற்கையின் அழகியலையும் சமூ கத்தின் அவலங்களையும் இனிய எளிய நடையில் எடுத்துரைக்கும் தலைசிறந்த நவீன இலக்கியம்.

- ழகரன்


மரியாதை கெட்டுப் போய்விடும்

 குடுமி குருமூர்த்திகளுக்கு மண்டைக் கொழுப்பு அதிகரித்துவிட்டது.

22.7.2020 நாளிட்டதுக்ளக்கேள்வி பதிலில் இடம் பெற்றதைப் பாருங்கள்.

இந்த பொருள் என்ன?

மதுவைக் கொண்டு வந்த முதல் அமைச்சர் கலைஞர், எம்.ஜி.ஆரை செருப்பால் அடிக்கலாமா என்று எழுதுகிறார்.

இந்த வார துக்ளக்கில் (27.1.2021, பக்கம் 33) திமுக தலைவரின் பித்தலாட்ட வாக்குறுதிகள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தட்டிக் கேட்க ஆள் இல்லை என்ற ஆரிய அகங்தையா? மத்தியில் ஆரியத்தின் ஆட்சி நடக்கிறது என்ற தைரியமா? மரியாதை கெட்டுவிடும் - எச்சரிக்கை.

Comments