டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாய அமைப்புகள், அரியானா மாநில முதல்வர் கத்தார் கலந்து கொள்ள இருந்த மகாபஞ்சாயத்துக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்ததையடுத்து, முதல்வரின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
· குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து ஷாகீன்பாக் பகுதியில் அமைதி வழியில் முஸ்லீம்கள் போராடினார்கள். தற்போது டில்லிக்கு வெளியே விவசாயிகள் போராடுகிறார்கள். ஆண்களும், பெண்களும், முதியோர்களும் குழந்தைகளும் அமைதி வழியில் போராடி வரும் அவர்களின் போராட்டத்திற்கு போற்றத்தகுந்தது. ஆனால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது மோடிக்கு ஒத்துவராத செயலாக உள்ளது என ஏ.ஜி.
நூராணி கருத்திட்டுள்ளார்.
· வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் உரிய நியாயம் கிடைக்காது என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன்
எக்ஸ்பிரஸ்:
· வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு எதிராக நாடு முழுவதில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்கள் காஜிபூர் அருகே போராடும் விவசாயிகளின் முன்னிலையில் மல்யுத்தம் செய்து சாகசம் செய்தனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
· மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் அகில இந்திய ஹிந்து மகாசபா அமைப்பு, காந்தியைக் கொன்ற கோட்சேயின் கொள்கையை விளக்கும் விதமாக கோட்சே நூலகம் அமைத்துள்ளனர். குவாலியரில் தான் கோட்சே காந்தியைச் சுட முடிவு செய்து துப்பாக்கி வாங்கினான் என ஹிந்து மகாசபா
அமைப்பாளர் தெரிவித்தார்.
நியூ
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· வேளாண் சட்டங்கள் தொடர்பாக மோடி அரசு உச்சநீதிமன்றத்தை 'அரசியல் கேடயமாக' பயன்படுத்துவதாக அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
· விவசாயிகள் கிளர்ச்சி அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை வெறும் இரண்டு இடங்களாகக் குறைக்கும் என்று முன்னாள் என்டிஏ நட்பு கட்சியான ஆர்எல்பியின் ஹனுமான் பெனிவால் தெரிவித்துள்ளார்
· வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய ஆர்.எல்.பி. கட்சியின் ஹனுமான் பெனிவால், எம்.பி, வரும் தேர்தலில் பாஜக இரண்டு இடங்களில்தான் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.
· அமெரிக்க கேபிடல் ஹில் வன்முறை அமெரிக்காவிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பராக் ஒபாமா சொன்னது சரியே.
· பெரிய கேள்வி என்னவென்றால், கை குலுக்கல் மற்றும்
அணைப்புகள் அரசியலில் முடிவுகளைத் தருகின்றனவா? மோடியின் அரவணைப்புகள் அவரது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உலகளவில் காணப்படுகின்றன. ஆனால் அதனால் இந்தியாவுக்கு எந்த நண்பர்களையும் வெல்ல முடியவில்லை. உடனடி சுற்றுப்புறத்தில் கூட இல்லை. அதிகாரத்தில் இருக்கும் தனிநபர்களின் தனித்துவத்திற்கு அப்பால் இந்தியா வளர வேண்டும். உட்கார்ந்திருக்கும் குடியரசு தலைவரின் பைத்தியக்காரத்தனத்தை விட அமெரிக்கா உயர வேண்டிய அவசியம் அதிகம் என மூத்தப் பத்திரிக்கையாளர்
டி.ஜே.எஸ்.ஜார்ஜ்
தெரிவித்துள்ளார்.
தி
டெலிகிராப்:
· கல்கத்தாவில் தீப்பந்தம் ஏந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக பல தரப்பு மக்கள்
கலந்து கொண்ட மிகப் பெரிய பேரணி நடைபெற்றுள்ளது.
பாஜகவிடம்
இருந்து விலகிச் செல்வது குறித்து நிதிஷ் குமார் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய
ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் நீண்ட ஆயுளைப் பற்றிய ஊகங்கள் பரவலாக உள்ளன.
விவசாயிகளின்
எதிர்ப்பு அல்ல, இது ஒரு புரட்சி என போராட்டம் பற்றிய
ஆவணப்படம் எடுக்கும் நிதிஷா ஜெயின் உருக்கமாக விவரித்துள்ளார்.
- குடந்தை
கருணா
11.1.2021