புதுடில்லி, ஜன.5 டில்லியில் பருவம் தவறி கடும் மழை பெய்த போதிலும், இத்துடன் கடும் குளிர் காற்றும் அடித்து வரும்போதிலும், போராடும் விவசாயிகளின் உணர்வுகளை அவற்றால் மழுங்கடிக்க முடியவில்லை. தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டும், கம்பளியால் போர்த்திக் கொண்டும் போராட்டத்தைத் தொடர்கின்றார்கள்.
விவசாயிகள் போராடிவரும் டில்லி சிங்கூ எல்லையில் கடந்த சில நாட்களாகக் கடும் மழை பெய்து, போராடும் விவசாயிகள் தங்கியிருந்த இடங்களையெல்லாம் மிகவும் மோசமாகிவிட்டது. இத்துடன் கடும் குளிர் காற்றும் வீசிக் கொண்டிருக்கிறது. வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியசுக்கு வீழ்ந்திருக்கிறது.