தருமபுரி மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் மாணவர் சந்திப்பு கூட்டங்களை நடத்த திராவிட மாணவர் கழக, இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு!

தருமபுரி, ஜன. 12- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மாணவவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 10.1.2021 ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணியளவில் தர்மபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி தலை வர் தீ.ஏங்கல்ஸ் தலைமை தாங் கினார். கடத்தூர் ஒன்றிய மாண வர் கழகத் தலைவர் .சமரசம் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட கழக செயலா ளர் .மாதன், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் பெ.கோவிந்த ராஜ், 'விடுதலை' வாசகர் வட்ட தலைவர் .சின்னராஜ், தர்மபுரி நகர தலைவர் கரு.பாலன், மேனாள் மாவட்ட செயலாளர் சி.காமராஜ் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். மாவட்ட கழகத் தலைவர் வீ.சிவாஜி, மண்டல கழகத் தலைவர் .தமிழ்ச்செல்வன், மாநில மாண வர் அணி துணைச் செயலாளர் .யாழ்திலீபன், மண்டல மாணவர் கழகச் செயலாளர் மா.செல்லதுரை ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக  மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் சிறப்புரையாற்றி திராவிடர் கழக மாணவர் கழகப் பொறுப்பாளர் களை அறிவித்தார்.  

கலந்துரையாடல் கூட்ட

தீர்மானங்கள்

1.வருகின்ற காலங்களில் மூட நம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி, இட ஒதுக்கீடு குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிடுகின்ற அறிக் கைகளை துண்டறிக்கையாக  அச் சிட்டு பள்ளி,கல்லூரிகளின் முன்பு மாணவர்களுக்கு வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

2.கிராமங்கள்தோறும் மாண வர்கள் இளைஞர்களை சந்தித்து உறுப்பினர்களை சேர்ப்பது என முடிவு செய்யப்படுகிறது.                          

3.விவசாய வேளாண் சட்டங் களுக்கு எதிராக 45 நாட்களாக தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளை பாராட்டுவதுடன், போராட்டத்தில் பங்கு பெற்று உயிர் நீத்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட திரா விடர் மாணவர் கழக இளைஞரணி சார்பில் வீரவணக்கத்தைச் செலுத் துகிறது. மத்திய பிஜேபி அரசு வேளாண் சட்டத்தை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.               

4.தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்க ளுக்கு இதுவரை மத்திய அரசு மூலம் வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையை இன்றைய பிஜேபி அரசு  இரத்து செய்துள்ளது.இத னால் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி மேற்படிப்பு பாதிப்படைந்து கல்வியை பாதியில் நிறுத்தும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது, எனவே மத்திய அரசு மாணவர்களுக்கு வழங்கிய கல்வி உதவித் தொகையை தொடர்ந்து வழங்குமாறு மாவட்ட மாணவர் கழக இளை ஞரணி சார்பில் கேட்டுக்கொள் ளப்படுகிறது.         

5.மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மாணவரணி சார்பில் கீழ்க்கண்ட இடங்களில் மாணவர்கள் இளைஞர்களின் சந்திப்பு கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்படுகிறது. 1.வேப்பிலைப் பட்டி 2.புட்டிரெட்டிப்பட்டி கொண்டகரஅள்ளி, 3.ஆலமரத் துப்பட்டி 4.காமலாபுரம் 5.மார் வாடி 6.தாதனூர் ஆகிய இடங் களில் இளைஞர்களே மாணவர் களே திராவிடர் கழகத்தில் இணைய வேண்டும் ஏன்? என்கின்ற தலைப் பில் மாணவர்களின் சந்திப்பு கூட் டத்தை   நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது.                               

6.தமிழர் தலைவர் மனிதய பண்பாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெயரால் தொண்டறச் செம்மல் கி.வீரமணி இரத்ததான இயக்கம் என்று இன்று முதல் செயல்படத் தொடங்கி நடை பெறும் என தீர்மானிக்கப்படுகிறது. 

7.மாணவர் கழக பொறுப்பாளர் கள் நியமனம்: மாவட்ட மாணவர் கழக தலைவர் .சமரசம், மாவட்ட செயலாளர் . பிரதாப், மாவட்ட துணை செயலாளர் இரா.வசந்த குமார், மாவட்ட துணைத்தலைவர் மா.முனியப்பன், தருமபுரி நகர இளைஞரணி தலைவர் வி.பா.அறி வுக்கரசு, கடத்தூர் ஒன்றிய மாண வர் கழக தலைவர் .பெரியார், மாணவரணி செயலாளர் .விஜய்,    ரேகடஅல்லி மாணவர் கழகத் தலைவர் சி.அறிவுமதி, ஆகியோர் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டனர்.  

கலந்துரையாடல் கூட்டத்தில்  விடுதலை வாசகர் வட்ட செயலா ளர் .சுதாமணி, மாவட்ட இளை ஞரணி செயலாளர் கொண்ட கரஅள்ளி சிறீதரன், தாதனூர் தோழர் பிரதாப், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் அர்ஜுனன், மாவட்ட முன்னாள் மாணவர் அணி தலைவர் மா.முனியப்பன், மார்வாடி கழகத் தலைவர் காந்தி, மாணவர் கழக சுப்பிரமணி, ஆகி யோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அர்ஜுனன் நன்றி கூறினார்.

Comments