பாலியல் வன்முறையிலிருந்து தற்காப்புக்காக கொன்ற பெண் - கொலைவழக்கிலிருந்து விடுவிப்பு

திருவள்ளூர்,ஜன.8 இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கொன்ற பெண் விடுவிக்கப்படுவதாக திரு வள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  அரவிந்தன் அய்.பி.எஸ்., தெரிவித்து இருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழ வரம் அருகே அல்லிமேடு கிரா மத்தைச் சேர்ந்த 19 வயது பெண் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஊரை விட்டு சற்று தொலைவிற்கு சென்ற நிலையில், அவரை பின் தொடர்ந்து வந்த அவரது உறவினர் அஜித்குமார்(25) கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றநிலையில், அப் பெண் தன்னை காத்துக் கொள்வ தற்காக அஜித்குமாரிடம் கத்தியை பிடுங்கி, அவரை சரமாரியாக வெட்டியதில், அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து சோழ வரம் காவல் நிலையத்திற்கு சென்ற அப் பெண்  நடந்தவற்றை கூறி சரண் அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அஜித்குமார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரண் அடைந்த அப்பெண் ணிடம் காவல்துறையினர் விசா ரணை நடத்தியதில் அவர் தற்காப் பிற்காக அஜித் குமாரை கத்தியால் குத்தியதும், அவருக்கு கொலை செய்யும் எண்ணம் இல்லை என்பதும் தெரியவந்தது. அதனடிப் படையில், இளம் பெண் மீது இந்திய தண்டனைச்சட்டம் 302 கீழ் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு, இந்திய தண்டனைச்சட்டப் பிரிவு 100 ஆக மாற்றப்பட்டு அந்தப் பெண் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர்  அரவிந்தன் கூறியதாவது, “கொலை செய்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் தற்காப்பிற்காக மட்டுமே அஜித் குமாரை கத்தியால் குத்தியது தெரியவந்தது. அதனால் அவர் மீது இந்திய தண்டனைச்சட்டம் 302இன்கீழ் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு, இந்திய தண் டனைச்சட்டப் பிரிவு 100 ஆக மாற்றப்பட்டு விடுவிக்கப்படுகிறார். இது தொடர்பான இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்பதை காவல்துறை சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.

Comments