தேசியம் காக்க, தமிழினம் காக்க புறப்படுவோரே பதில் சொல்லுங்கள்

திராவிடர் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட "மயக்க பிஸ்கெட்டு,"கள் ஓர் எச்சரிக்கை என்ற புத்தகம் தமிழகமெங்கும் கழகத் தோழர்கள் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அவன் விவரம் வருமாறு:

தஞ்சை வல்லம்

"மயக்க பிஸ்கெட்டு,"கள் ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகம் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 19.12.2020 சனி மாலை 5 மணியளவில் தஞ்சை ஒன்றியம் வல்லத்தில் வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்களிடம் வழங்கப்பட்டது.

மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன் தலைமை வகித்தார்.

தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் நிகழ்வை தொடங்கிவைத்தார்.

மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக்குமார், மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், மாவட்ட துணைச் செயலாளர் .சந்துரு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் .விஜயகுமார், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் செ. ஏகாம்பரம், மண்டல மகளிரணி செயலாளர் .கலைச்செல்வி, தஞ்சை தெற்கு ஒன்றியத் தலைவர், இரா.சேகர், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு .இராமலிங்கம், தஞ்சை நகரத் தலைவர் பா.நரேந்திரன், வல்லம் நகரத் தலைவர் .அழகிரி  ஆகியோர் முன் னிலையேற்றனர்

நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்டச் செயலாளர் .அருணகிரி, மாநில மாணவர் கழக அமைப் பாளர் இரா.செந்தூரபாண்டியன், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் கா.அரங்கராசன், பெரியார்நகர் .உத்திராபதி, மாணவர் கழக பொறுப்பாளர்கள் .சிந்தனைச்செல்வன், விடு தலையரசி, வெ.அனந்திகா உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர்

புத்தகம் வழங்கிய நிகழ்வு பொதுமக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

மன்னை மேலவாசல்

"மயக்க பிஸ்கெட்டு"கள் ஓர் எச்சரிக்கை  என்னும் சிறிய நூலை  மன்னார்குடி ஒன்றி யத்தில் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியினை மன்னார்குடி ஒன்றிய கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கழக பேச்சாளர் இராம.அன்பழகன் பொதுமக்களுக்கு வழங் கினார். நிகழ்ச்சியில் மேலவாசல் திராவிடர் கழகத் தலைவர் திரிசங்கு ,கிளைக் கழகச் செயலாளர் குணசேகரன் ,ஒன்றிய திராவிடர் கழகஇளைஞர் அணி செயலாளர் பெட்ரண்ட் ரஸல் ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோவன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர் இரா.கோபால், அன்புச் செல்வம் மாணவர் கழக மேலவாசல் ,ஆகியோர் கலந்து கொண்டு  மேல வாசலில் புத்கத்தை வழங்கினர்.

வடுவூர், எடமேலையூர், எட கீழையூர்

19.12.2020 அன்றுநீடாமங்கலம் ஒன்றியம் வடுவூர் மற்றும் எடமேலையூர் எடகீழையூர் பகுதியில் தமிழர் தலைவரின் "மயக்க பிஸ்க் கெட்டு"கள் புத்தகம் பொது மக்களிடம் வழங் கப்பட்டது.     இந்த நிகழ்வில் ஒன்றிய தலைவர் பொன்னுசாமி ஒன்றியச்செயலாளர் சக்திவேல், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் தங்க. வீரமணி, ஒன்றிய .. தலைவர் ஆசிரியர் நடராஜன், தென்பாதி லோகநாதன், நவச் சிவாயம், உத்திராபதி, ஒன்றிய துணை தலைவர் எடமேலையூர் வீராசாமி, எடமேலையூர் இலட்சுமணன், நகர .தலைவர் ..அய்யப் பன், மாவட்ட மாணவர் கழக துணை தலைவர் பெரிய கோட்டை ராஜேஷ் கண்ணன் ஆகி யோர் கலந்துகொண்டனர்.

மேல திருப்பாலக்குடி

19.12.2020 அன்று "மயக்க பிஸ்கெட்டு"கள் ஓர் எச்சரிக்கை என்னும் நூலினை மன்னார்குடி ஒன்றியத்தில் மேல திருப்பாலக்குடி பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலை மையில் ஒன்றிய கழக அமைப்பாளர் .இன்பக் கடல் அவர்களின் முன்னிலையில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் கழக விவசாய அணி அமைப்பாளர் குமாரசாமி, மேல திருப்பாலக் குடி கிளை கழக தலைவர் எம் கோவிந்தராசு, மகாதேவபட்டினம் திராவிடர் கழகக் கிளை தலைவர் எம் எஸ்.சேகர், பகுத்தறிவு ஆசிரியர் அணி ஆசிரியர் அருளரசன், மாவட்ட ஆசிரியர் அணி செயலாளர் இரா.கோபால், மேலவாசல்  கழக தலைவர் திரிசங்கு, மேலவாசல் கழக செயலாளர் குணசேகரன் ஆகியோர் இந்நிகழ்ச் சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நூலினை வழங்கினார்கள்.

திருவாரூர் மாவட்டம்,

சோழங்கநல்லூர்

"மயக்க பிஸ்கெட்டு"கள் ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள புத்தகங்களை பொதுமக்களிடம் பரவலாக கொண்டு செல்ல தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தியதன்படி 16-12-20 அன்று மாலை 4.30 மணியளவில் திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரில் கழக இளைஞ ரணி சார்பில் பொதுமக்களிடம் வழங்கப் பட்டது.

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வீ.மோகன் தலைமை வகித்தார். இளைஞரணி தோழர் தீரன் முன்னிலை வகித்தார். கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் விளக்கவுரை யாற்றினார். மாவட்டத் துணைத்தலைவர் எஸ். எஸ்.எம்.கே.அருண்காந்தி முன்மொழிந்தார்.

நிகழ்வில் திருவாரூர் ஆசிரியர் முனியாண்டி, மாவட்ட துணைச்செயலாளர் வீரையன், மாவட்ட விவசாய தொழிலாளரணி தலைவர் ரெத்தினசாமி, உரத்தநாடு, பெரியார்நகர் .உத்திராபதி, ஒன்றியத் தலைவர் இராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சாம்பசிவம் ஒன்றிய பக தலைவர் கவுதமன், மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதி, ஒன்றிய மகளிரணி தலைவர் சைனம்பு, பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட கழகத்தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

புத்தகங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பெற்றுச்சென்றனர்

அம்மாபேட்டை

"மயக்கக பிஸ்கெட்டு"கள் - ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகம் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 22.12.2020 செவ்வாய் மாலை 6.30 மணியளவில் தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் வணி கர்கள், விவசாயிகள், பொதுமக்கள், இளை ஞர்கள், மாணவர்களிடம் வழங்கப்பட்டது.

மாவட்டஇளைஞரணி அமைப்பாளர் .விஜயக்குமார் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட செயலாளர் .அருணகிரி நிகழ்வை தொடங்கி வைத்தார்.

மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், அம்மாபேட்டை ஒன்றியத் தலைவர் கி.ஜவகர் ஒன்றிய செயலாளர் செ.காத்தையன், ஒன்றிய துணை தலைவர் உத்திராபதி, ஒன்றிய துணைச்செயலாளர் வை.இராஜேந்திரன், ஒன்றிய அமைப்பாளர் செண்பகபுரம் தமிழ் செல்வன், சாலியமங்கலம் நகரத்தலைவர் துரை. அண்ணாத்துரை, பெரியார்நகர் .உத்தி ராபதிஆகியோர் முன்னிலையேற்று பங் கேற்றனர். பொதுமக்களிடையே இந்த புத்தகம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

கோவை

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் அறிவிப்பிற்கு ஏற்ப கோவை மாவட்ட திராவிடர் கழகம்  சார்பில் அனைத்து பகுதி களிலும் தேசியம் காக்க தமிழினம் காக்க புறப் படுவோரே பதில் கூறுங்கள் "மயக்க பிஸ் கெட்"கள் - ஒர் எச்சரிக்கை நூல் பரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

கோவை மாநகர பகுதி பெரியார் நகரில் மாநகர தலைவர் .வீரமணி தலைமையிலும், வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந் துள்ள பகுதியில் மாநகர அமைப்பாளர் மே.. ரங்கசாமி தலைமையிலும், டவுன்ஹால் பகுதி யில் ஆட்டோ சக்தி தலைமையிலும், காந்தி பார்க் பகுதியில் பெரியார் பெருந்தொண்டர் .கண்ணன் தலைமையிலும், பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் தோழர் சுரேசன் நட ராஜன் தலைமையிலும், புளியகுளம் பகுதியில் தோழர் கிருஷ்ணனமூர்த்தி தலைமையிலும், கல்லுமடை பகுதியில் தோழர் தர்மலிங்கம் தலைமையிலும், திராவிடர் கழகம் வெளியிட்ட "மயக்க பிஸ்கெட்டு"கள் புத்தகங்களை மக்க ளுக்கு வழங்கும் பணி மிக சிறப்பாக நடை பெற்றது கோவை மாநகரில் அனைத்து பகுதி களிலும்  பொதுமக்கள் மிக ஆர்வத்தோடு வாங்கிசென்றனர்

திருவையாறு, கண்டியூர்

தேசியம் காக்க, தமிழினம் காக்க புறப்படு வோரே பதில் சொல்லுங்கள் "மயக்க பிஸ்கட்டு கள்" ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகம் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 20.12.2020 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் தஞ்சை மாவட்டம் திருவையாறு, கண்டியூர் பகுதிகளில் வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர் களிடம் வழங்கப்பட்டது. ஒன்றிய இளைஞரணி தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார்.

திராவிடர் கழக காப்பாளர் வெ.ஜெயராமன் நிகழ்வை தொடங்கி வைத்தார். ஒன்றியத் தலைவர் .கண்ணன், ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் துரை.ஸ்டாலின், ஒன்றிய அமைப்பாளர் கவுதமன், மண்டல மாணவரணி செயலாளர் மணிகண்டன், ஒன்றிய மகளிரணி தலைவர் மலர்கொடி ஆகியோர் முன்னிலை யேற்று பங்கேற்றனர். புத்தக வினியோகம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற் படுத்தியது

Comments