விஸ்கி பாட்டிலும் இராணுவ இரகசியமும்

மோடியின் ஆதரவு தொலைக் காட்சியான 'ரிபப்ளிக்' தொலைக் காட்சியின் தலைமை ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி டிஆர்பி முறைகேடு வழக்கில் கைதாகி பிணையில் உள்ளார்.

தற்போது அர்னாப் கோஸ்வாமியின் 'வாட்ஸ் அப்' உரை யாடலில், பாலகோட் விமான தாக்குதல் உள்ளிட்ட தேசப் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்கள் மற்றும் மத்திய அரசின் நெருக்கமான தொடர்புகள் குறித்த விஷயங்கள் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டுமென பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து டில்லியில் காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாலகோட் போன்ற இராணுவ ரகசிய தாக்குதல் தொடர்பான தகவல்கள் பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி, விமானப்படை தளபதி போன்றவர்கள் மட்டுமே அறிந்திருக்க முடியும். அப்படிப்பட்ட தகவல் பத்திரி கையாளருக்கு முன்கூட்டியே கசிந்திருக்கிறது என்றால் இது ரகசிய காப்பு சட்ட விதிமீறல் இல்லையா? தேசத்தின் ரகசியம் கசிய விடப்பட்டுள்ளது. தேசியவாதிகள், தேசப்பற்றாளர்கள் என கூறிக் கொள்கிறார்கள், ஆனால், தேச விரோதமான செயல் நடந்திருக்கிறது. அர்னாப்புக்கு தகவல் கசிய விட்டது 'கிரிமினல்' குற்றம். அது நமது விமானப்படை யையும், விமானிகளையும் ஆபத்தில் சிக்க வைக்கும் காரியம். இதைப் பற்றி விசாரித்தே தீர வேண்டும். ஆனால், அர்னாப்புக்கு யார் தகவல் தந்திருக்க முடியும்? பிரதமரா? உள்துறை அமைச்சரா? இப்படி இருக்கையில் எப்படி அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்? நிச்சயம் மாட்டார்கள் என்றார் ராகுல் காந்தி.

மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருக்கும் நிலையில் இத்தகைய இராணுவ இரகசியக் கசிவு ஒன்றும் புதிதல்ல.

அடல்பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்த«£பது நடந்த ஒரு நிகழ்வு நினைவூட்டத்தக்கது.

1999 மே 11,13 ஆகிய இரு நாள்களில் இராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பாலைவனத்தில், இந்தியா அய்ந்து அணுகுண்டுகளை வெடிக்கச் செய்து சோதனை நடத்தியது. அரசாங்கத்தின் மிகவும் இரகசியமான இந்த நடவடிக்கை முப்படைகளின் தலைவரான பிரதமருக்குக்கூட முதல்நாள்தான் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அதி முக்கிய இந்தக் கூர்மையான இரகசியம் ஆர்.எஸ்.எசுக்கு மட்டும் தெரிந்திருந்தது. எந்த நாளில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதோ, அதே நாளிலே ஆர்.எஸ்.எஸின் அதிகாரப்பூர்வ நாளேடான ஆர்கனைசர் "அணு ஆயுத இந்தியா" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு இதழை வெளியிட்டு பொக்ரான் பற்றிய தகவல்களை விலாவாரியாக வெளியிட்டது என்றால், மத்திய பா... ஆட்சிக்கு மிகவும் நெருக்கமான ஆதரவான 'ரிபப்ளிக்' தொலைக்காட்சியின் தலைமை ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு பால்கோட் விமான தாக்குதல் என்ற அதி முக்கிய இராணுவ இரகசியம் முன்கூட்டியே தெரிந்திருந்ததில் ஆச்சரியம் எப்படி இருக்க முடியும்?

ஓர் அலுவலகத்தில் பார்ப்பனர் ஒருவர் இருந்தால் அந்த அலுவலகத்தில் இரகசியத்தைப் பெறுவது சுலபம் என்பார் தந்தை பெரியார்.

ஒரு பெயர் பெரும்பாலோருக்கு மறந்திருக்கலாம். ஒரு விஸ்கி பாட்டிலுக்காக இராணுவ இரகசியங்களை பாகிஸ்தானுக்குத் தெரிவித்த அந்த ஆசாமியின் பெயர் கூமர் நாராயணன் அய்யர்வாள் என்பதாகும்.

அவர்மீது தொடுக்கப்பட்ட விசேஷ வழக்கின் முடிவு என்னாயிற்று என்று யாருக்குத்தான் தெரியும்?

டில்லியில் அமைச்சர்கள் வாழும் பகுதியில் நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு மாளிகை கட்டி நிம்மதியாக வாழ்ந்தார் என்பதுதான் உண்மை!

காட்டிக் கொடுப்பதைக் கலையாகக் கொண்டு கைநிறைய லஞ்சப் பணம் வாங்குவது என்பது ஆரியப் பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலையாயிற்றே!

கவுடில்யன், திம்மண்ணா, ஜக்கலு ராயண்ணா, வெங்கண்ணா, பூர்ணய்யா, கோவிந்த தீட்சதன், சந்திரசேகரப் பட்டாச்சார்யா என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்களைப் பொதுவாக இராணுவத்தில் சேர்ப்பதில் தயக்கம் கொண்டதுண்டு. காரணம், அவர்களின் காட்டிக் கொடுக்கும் கலையே!

'ரா' பிரிவு உளவுத்துறை அதிகாரியாக இருந்த கூமர் நாராயணன் உளவுத்துறையில் பணி புரிகிறார் என்று அவரது மனைவிக்கே கூடத் தெரியாது.

அவர் அய்ரோப்பிய கப்பல் நிறுவனம் ஒன்றில் இணைந்து கப்பல்களுக்கு என்ஜின் விற்பனை தொடர்பான நிறுவனம் நடத்தி வருகிறார் என்று தான் அவரது மனைவி ஊடகம் ஒன்றில் கூறியுள்ளார், 17.1.1985 அன்று மாலை அவர் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து அவரது வேலைக்காரரிடம் விசாரணை செய்யச் சொல்லி விட்டு அவரது மனைவி தூங்கச் சென்று விட்டார். மறுநாள் காலையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் அவரது கணவர் கூமர் நாராயணன் உளவு பார்த்த விவகாரத்தில் கைதாகிவிட்டதாக செய்தி வெளியானது.

 கைது செய்யப்பட்ட அவர் அடுத்த ஆண்டு பிணையில் வெளிவந்த பிறகு நீண்ட ஆண்டுகள் டில்லியில் உள்ள அவரது சொகுசு மாளிகையில் வாழ்ந்து மரணமடைந்தார். அவரது மிகவும் ஆடம்பரமான சொகுசு மாளிகையின் மதிப்பு 1985-ஆம் ஆண்டே ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்பட்டது.

கொச்சியில் இருந்து தனியார் நிறுவன வேலைக்காக சென்னை - பிறகு டில்லி சென்று குடியேறிய கூமர் நாராயணனுக்கு குறுகிய காலத்திலேயே இத்தனைக் கோடி மதிப்புள்ள சொகுசு மாளிகை எப்படி சொந்தமானது என்று இன்று வரை விசாரணை செய்து கொண்டே இருக்கின்றனராம்!

தெரிந்து கொள்ளுங்கள் - பார்ப்பனர்களின் காட்டிக் கொடுக்கும் தன்மையை!

Comments