இன்று காந்தியார் நினைவு நாள்! (1948 ஜனவரி 30) இந்நாளில் சிந்திக்க வேண்டியவை ஏராளம் உண்டு.
காந்தியாரை
மகாத்மா என்று ஒரு காலத்தில் ஏற்றுப் போற்றி, இன்னொரு காலத்தில் அவரை 'துர் ஆத்மா' என்று கருதி படுகொலை செய்தவர்கள் யார்? அந்தப் படுகொலை யாளர்களின் பின்னால் உள்ள சித்தாந்தம் என்ன - தத்துவம் என்ன என்பதுதான் முக்கியம். - அதனை ஒழிப்பதுதான்
முக்கியம் என்று காந்தியார் படுகொலையை ஒட்டி வானொ லியில் பேசுகையில் தந்தை பெரியார் குறிப்பிட்டது - பொன்னோவியக் கருத்தாகும். காந்தியாரை சுட்டுக் கொன்ற கூட்டம் இன்னும் அவரை சிறுமைப்படுத்தித்தான் வருகிறது.
2019-ஆம்
ஆண்டு காந்தியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டபோது, உத்தரப்பிரதேசத்தில்
இந்து மகா சபாவினர், காந்தியாரின் உருவப் பொம்மையை சுட்டு அதைக் கொண்டாடினர். தேசத் தந்தை என்று கூறப்படு பவரின் நினைவு நாளை, துப்பாக்கியால் ‘சுட்டு' கொண்டாடிய இந்து மகா சபாவின் தலைவர் பூஜா ஷகுன் பாண்டே இந்து தேசம் உருவாகாமல் போனதற்கு காரணமானவர் பழிவாங்கப் பட்டார்', என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்
மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மேனாள் மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோர் பூஜா ஷகுனுடன் ஒரு விழாவில் கொண்டாட்டத்தில் இருக்கும் நிழல்படங்கள் வெளியாகின. இந்தப்
படங்களை பூஜா ஷகுன், தனது முகநூலிலே பகிர்ந்திருந்தார். மார்ச் 19, 2017 ஆம் நாள் அன்று பாஜக தலைவர்களுடன் அவர் இருக்கும் படங்களை பூஜா முகநூலில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகியது.
காந்தியாரின் உருவப் பொம்மையை துப்பாக்கியால் சுட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பூஜா, ‘இனி ஒவ் வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்த உள்ளோம். தசரா பண்டிகையின் போது இராவணனின் உருவப் பொம்மையை எரிப்பது போன்றது - இந்த நிகழ்வு' என்று அவர் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் கருத்து கூறினார். இதே
போல் மராட்டியத்தில் உள்ள பன்வேல் பகுதியில் கோட்சேவிற்கு மணிமண்டபம் கட்டவும், அங்கு அவரது சிலை வைக்கவும் மத்தியப் பிரதேச மற்றும் மராட்டிய மாநில பாஜக சார்பில் நிதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இதனை அடுத்து ராஜஸ்தானில் இருந்து கோட்சே பளிங்குச் சிலை டில்லி இந்துமகாசபைக்கு கொண்டு செல்லப்பட்டது,
மராட்டியத்தில் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஜக ஆட்சி அகன்ற பிறகு கோட்சேவிற்கு மணி மண்டபம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
மத்தியில்
பிஜேபி ஆட்சி நடந்தபோது 'மை நாதுராம் கோட்சே
போல்தே!' எனும் தலைப்பில் இதே சங்பரிவார் நாடகம் நடத்தியதுண்டு. நான் நாதுராம் கோட்சே பேசகி றேன் என்பது இதன் பொருள்.
காந்தியாரைக்
கோட்சே கொல்லவில்லை 'மகாவிஷ்ணு' அவதாரம் எடுத்து காந்தி என்ற அரக்கனைக் கொன்றதாக அந்த நாடகம் கூறியது.
வாஜ்பேயி
பிரதமராக இருந்தபோது தாராளமாக அந்த நாடகம் நடத்தப்பட்டது.
இப்பொழுது
ஒன்றைக் கூறிக் கொண்டு அலைகிறார்கள். கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல என்பதுதான் அந்தப் பொய்யுரை.
'இந்தியா
டுடே'யின் முதன்மை
ஆசிரியர் மற்றும்
வெளியீட்டாளர்மீது
2004ஆம் ஆண்டில் முகேஷ்கார்க் என்பவர் ஓர் அவமதிப்பு வழக்கினைத் தொடர்ந்தார்.
நாதுராம்
கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று எழுதிய தற்காகப் போடப்பட்ட வழக்கு அது.
அதன்
மீதான தீர்ப்பினை பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றம் வழங்கியது. கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று எழுதியது அவமதிப்பல்ல என்பதுதான் அந்தத் தீர்ப்பு.
காந்தியார்
கொலை வழக்கில் நாதுராம் கோட்சேயுடன் அவரது சகோதரர் கோபால் கோட்சேக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. நாதுராமுக்கு தூக்குத் தண்டனையும் அவனது சகோதரருக்கு ஆயுள் தண்டனையும் அளிக் கப்பட்டது.
தண்டனைக்
காலம் முடிந்து விடுதலையான கோபால் கோட்சேயிடம் 'இந்து' குழுமத்தின் 'ஃபரண்ட் லைன்' ஏடு பேட்டி கண்டு வெளியிட்டது. எனது சகோதரர் நாதுராம் கோட்சே மற்றும் என்னை ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்ல என்று அத்வானி கூறுவது அசல் கோழைத்தனம் என்று சொல்லவில்லையா?
காந்தியாரை
சுட்டுக் கொன்ற மதவாத சித்தாந்தம் இப்பொழுது அதிகார ஆணவத்துடன் துள்ளிக் குதிக்கிறது. அன்று தந்தை பெரியார் சொன்னதை நினைவூட்டுகிறோம். “காந்தியாரைப் படுகொலை செய்த தத்துவத்தை ஒழிப்பது தான்”, காந்தியார் நினைவு நாளில் மக்கள் எடுக்க வேண்டிய சூளுரை!