திருச்சி பீமநகர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நீலமேகம் அவர்களுக்கு வீர வணக்கம்!

திருச்சியில் திராவிடர் கழகத்தின் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர் நீலமேகம் (வயது 98) (பீமநகர்வியாழக்கிழமை (14.1.2021) திருச்சியில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரமும், வேதனையும் அடைகிறோம்.

அமைதியும், ஆழ்ந்த கொள்கைப் பற்றும் கொண்டவர். அடக்கமும், பண்பும் உள்ள உறுதியான  கொள்கை வீரர். சுமார் 40 ஆண்டுகளுக்குமேல், அவர் தென்னூர் இந்தியன் வங்கியில் பணியாற்றிய காலம் முதற்கொண்டு அவரை அறிவோம்.

அவரது மகன்கள், மகள்கள் ஆகியோரை வளர்த்து ஆளாக்கி, ஒரு நல்ல கொள்கைக் குடும்பமாக நடத்தி வந்த சுயமரியாதை வீரர்.

சில மாதங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் இருந்தபோது, சென்று விசாரித்து, உங்களுக்கு நூறாண்டு எப்படியும் நடந்திடும் என்ற நம்பிக்கை உண்டு என்று கூறி, நலம் விசாரித்த நினைவு உள்ளது.

அவரது இழப்பால் வருந்தும் அவரது குடும்பத்தினர், நம் இயக்கத்தவர் அனைவருக்கும் ஆறுதலும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கழக சார்பில் மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையில் தோழர்கள் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மறைந்தவருக்கு வீர வணக்கம் செலுத்து வார்கள்!

மறைந்த நீலமேகம் அவர்களுக்கு நமது வீர வணக்கம்!

 

 கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்  

சென்னை

15-1-2021

குறிப்பு: இறுதி நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுத்திருந்த இரங்கல் அறிக்கை அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

Comments