டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெங்களூருவில் காங்கிரசார் பிரமாண்ட ஊர்வலம்

பெங்களூரு, ஜன.21 டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதர வாக பெங்களூருவில் காங்கிரசார் பிரமாண்ட ஊர்வலம் நடத்தினர். மேலும் அவர்கள் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தில் சித்தரா மையா பேசும்போது கூறியதாவது:-

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதை திரும்ப பெற விவசாயிகள் டில்லியில் கடந்த 58 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். பெண்கள், குழந் தைகள் என விவசாயிகளின் குடும்பத் தினரும் கலந்து கொண்டுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இந்த போராட்டத்தை நடத்து கிறார்கள். ஆனால் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. பிரதமர் மோடிக்கு மனிதத்துவம் இல்லை.

மத்திய அரசு 10 கட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. இதில் தீர்வு எட்டப்படவில்லை. மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. விவசாயிகள் தங்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். உச்சநீதிமன்றம் அந்த சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அந்த சட் டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக, அரசியல் அமைப்புக்கு உட்பட்டு இருந்தால் உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?.

விவசாயிகள் கிளர்ந்து எழுந்துள் ளனர். அதனால் அந்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண் டும். முன்பு கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடினர். அத்தகைய நிலை இங்கு வரும். அதற்கு முன்பு மத்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசி னார்.

Comments