புதுச்சேரியில் கழகத் தோழரின் குடும்ப விழா

புதுச்சேரி, ஜன. 11- புதுச்சேரி பகுத்தறி வாளர் கழக புரவலரும் தஞ்சை மாவட்ட திமுக விவசாயிகள் சங்கத்தின் தலைவ ராகவும் பணியாற்றிய எஸ்.தட்சிணா மூர்த்தி அவர்களின் தம்பியுமான புதுச் சேரி வசந்த் நகரில் வசித்து வரும் எஸ். கிருஷ்ணசாமி அவர்களின் 81ஆவது பிறந்தநாள் 31.12.2020 அன்று மாலை 6 மணியளவில் எளிமையான முறையில் அவரது இல்லத்தில் சிறப்பாக கொண் டாடப்பட்டது.

அவரது மருமகன் புதுச்சேரி மின் துறை பொறியாளர் சிவராஜ், கிருஷ்ண சாமி அவர்களின் வாழ்விணையர் ஓய் வுப்பெற்ற ஆசிரியர் சாந்தாதேவி, பேரப் பிள்ளைகள் பிரியங்கா, அரிஷ், அரவிந் தன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்ற பிறந்தநாள் நிகழ்வுக்கு புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி தலைமை தாங்கினார். புதுச் சேரி மண்டல தலைவர் இரா.சட கோபன், புதுச்சேரி நகராட்சி கழகத் தலைவர் மு.ஆறுமுகம், புதுச்சேரி நகராட்சி பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் மு.குப்புசாமி, புதுச்சேரி நகராட்சி செயலாளர் .கண்ணன் ஆகியோர் எஸ்.கிருஷ்ணசாமி அவர்களுக்கு பய னாடை அணிவித்து வாழ்த்துரையாற்றி னர். நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் .சிவராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் நிறைவாக திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையை சாந்தா தேவி - கிருஷ்ணசாமி அவர்கள் மாநிலத் தலைவர் சிவ.வீரமணியிடம் மகிழ்வுடன் அளித்தனர்.

Comments