இந்துக்கள் என்ற சொல் யாரையெல்லாம் குறிக்கும்?

இந்துஎன்ற சொல் இந்திய அரசியல் சட்ட அங்கீகாரத்தைப் பெற்ற சொல்தான்/ அது ஒரு சமயச் சார்புடைய (religious utterance) அல்ல. இந்திய அரசியல் சட்டத் தில் குறிக்கப்படக் கூடிய இந்துஎன்ற சொல் லுக்கு நேரிடையான வரைவிலக் கணம் (positive definitionகிடையாது. ‘கிறிஸ்துவ ரல்லாத. இசுலாமிய ரல்லாத, பார்சி அல்லாத மக்கள் எல்லாம் இந்துக்கள்என்று எதிர்மறை யான வரைவிலக்கணம் தான் உண்டு,

ஒரு மதம் என்றால் மூன்று செய்திகள் அடிப்படையாக அமைய வேண்டும். ஒரு முழு முதற்கடவுள், ஆகமங்கள், குறிப் பிட்ட வழிபாட்டு நெறிகள் ஆகியன அவை. இந்து மதத்திற்கு அல்லது அப்படி அடையாளம் காட்டப்படும் மதத்திற்கு இவை ஏதும் இல்லை.

Comments