திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழக சந்திப்பு கூட்டம்

திருச்சி, ஜன. 22- திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழக சந்திப்பு கூட்டம் 20.1.2021 புத்தூர் பெரியார் மாளிகையில் மாலை 6.00 மணிக்கு மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் மாநில தொழிலாளர் அணி செய லாளர் சேகர், மாவட்ட செயலா ளர் மோகன்தாஸ், மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில அமைப் பாளர் உரத்தநாடு குணசேகரன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் இராம. அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தொடக் கத்தில் திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர் அறி வுச்சுடர் அனைவரையும் வரவேற் றார். தொடர்ந்து மாநில அமைப் பாளர் உரத்தநாடு குணசேகரன் தந்தை பெரியார் அன்னை மணி யம்மையார் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் தொண் டையும் மாணவர்கள் ஏன் திரா விட மாணவர் கழகத்தில் சேர வேண்டும் என விளக்கமாக உரை யாற்றினார்.

கழக பேச்சாளர் இராம. அன் பழகன் பேசும்பொழுது மூடநம் பிக்கை பகுத்தறிவு சிந்தனைகளை எடுத்துக்கூறி மாணவர்களிடம் உற்சாகமாக உரையாற்றினார். கூட்டத்தில் திருச்சி மாவட்ட மாநகர ஒன்றிய திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம் இளைஞர் அணி மகளிர் அணி தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநில திராவிட மாணவர் கழக அமைப் பாளர் செந்தூர பாண்டியன் திருச்சி மாநகர மாணவர் கழகம், பாலக்கரை பகுதி மாணவர் கழகம், கல்லூரி மாணவர் அமைப்பு, பள்ளி மாணவர் அமைப்பு புதிய பொறுப்பாளர்களை அறிவித் தார். இறுதியாக திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் கண்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.                                    

திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் நடை பெற்ற மாணவர் சந்திப்பு கூட்டத் தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாணவர் கழக பொறுப்பாளர்கள்.

.கண்ணன். மாவட்ட தலைவர், .அறிவுச்சுடர். மாவட்ட செய லாளர், ..யாழினி. மாவட்ட அமைப்பாளர். .சசிகாந்த். திருச்சி மண்டல மாணவர் கழக செயலா ளர்.

மாணவர்கள் சந்திப்புக் கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள்

நந்தினி.மாவட்ட துணை தலைவர், பிரெட்லி.மாவட்ட துணை செயலாளர், குறிஞ்சி கலை கல்லூரி செயலாளர். ஜோன்ஸ் கிருஸ்டோ, எஸ்.நாகராஜ். குறிஞ்சி கலை கல்லூரி அமைப்பாளர், .சந்திரசேகர்.பிஷப் கல்லூரி அமைப்பாளர், .மணிகண்டன்.பெரியார் .வெ.ரா கல்லூரி அமைப்பாளர், சு.அறிவுசெல்வன். பள்ளி மாணவர் கழக அமைப் பாளர், கார்கில்.சட்ட கல்லூரி அமைப்பாளர், மி.கேம்பல்.பாலக் கரை பகுதி மாணவர் கழக தலை வர், டி.ஜோஸ்வா.பாலக்கரை பகுதி மாணவர் கழக செயலாளர், எஸ்.ஜெனட் மார்ஸின். திருச்சி மாநகர அமைப்பாளர்.

Comments