ஒரே கட்சி ஆட்சி தொடர்ந்தால், அதிகாரிகளும் கட்சிக்காரர்களாக மாறுவார்கள் - ப.சிதம்பரம்

மதுரை. ஜன.11  சிவகங்கை மாவட்டம் கண்ணக்குடியில் காங் கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது. மத்திய அமைச்சர் .சிதம் பரம் இதில் பங்கேற்று பேசினார்.

அப்போது, ஒரே கட்சி ஆட்சி 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தால், அதிகாரிகளும் கட்சிக்காரர்களாக மாறு வார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் எதிர்காலம் காங்கிரஸ் கட்சியை நம்பியே இருக் கிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தமால் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது.

தமிழகத்தில், முதலமைச்சர், துணை முதல்வர் இருவரும் அரசுப் பணத்திலேயே விளம்பரம் செய்து வருகின்றனர். எப்போது கவிழும் என்ற நிலையில், கடும் போராட்டங்களுக்கு இடையே அதிமுக 5 ஆண்டுகளை கடத்தி விட்டது. ஏழை களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் அரசு ஆட்சி செய்ய தகுதி அற்ற அரசாக மாறி விட்டது. இந்த அரசின் எதிர்காலம் என்ன என்பது இன்னும் 3 மாதங்களுக்கு பிறகு கண்டிப்பாக மக்கள் அளிக்கும் முடிவில் தெரிய வரும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

உலக மருத்துவக் கழிவுகளின் மய்யமாக மாறிப் போன இந்தியா

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

புதுடில்லி. ஜன.11 இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் 33,000 டன் மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாக வும், அதிபட்சமாக மகா ராட்டிரா மாநிலத்தில் 3,587 டன் மருத்துவக் கழிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக இந்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. இது உலக அளவில் ஏற்பட்ட மருத்துவக் கழிவில் ஒரு விழுக் காடு ஆகும். கரோனா தொற்று பரவல் தொடங்கிய காலங் களில் இருந்து, நாடு முழுவதும் மருத்துவக் கழிவுகளின் பங்கும் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை தடுக்கும் வகையிலான மாஸ்க், காலணிஉறைகள், ஊசிகள், சிரிஞ்சுகள், பிளாஸ்திரிகள், பாதுகாப்பு உடைகள் போன்றவை மட்டுமின்றி, தொற்று சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் மனித திசுக்கள், ரத்தம் மற்றும் உடல் திரவத்தால் மாசுபட்ட பொருட்கள், படுக்கை விரிப்புகள் போன்றவைகளும்  தொற்று கழிவுகளாகி விடுகின்றன.  இத னால் நாடு முழுவதும் பயோ வேஸ்ட் அதிகரித்து வருகிறது.  இவைகள் அனைத்தும் பத்திரமாக பாதுகாப்பட்டு, அப் புறப்படுத்தப்பட்டு,  அழிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் டிசமபர் வரையிலான 7 மாதங்களில் இந்தியா முழுவதும் 32,994 டன்  தொற்று மருத்துவக் கழிவுகள் உருவாகி உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB Central Pollution Control Board (CPCB) தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ( 2020) அக்டோபர் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் அதிகபட்சமாக மொத்தம் 5,500 டன் கழிவுகள் உருவாகி உள்ளன.  நாட்டிலேயே மகாராட்டிராவில் தான் அதிகமாக 5,367 டன்னும், அடுத்தபடியாக கேரளாவில் 3,300 டன், குஜராத்தில் 3,086 டன், தமிழகத்தில் 2,806 டன், .பி.யில் 2,502 டன், டில்லியில் 2,471 டன், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகாவில் முறையே 2,095 மற்றும் 2,026 டன் கரோனா கழிவுகள் உருவாகி இருப்பதாக மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 

பிரதமருக்கு எதிராகப் பதிவு இட்ட பைலட் பணி நீக்கமாம்!

மும்பை, ஜன.11  சுட்டுரையில் பிரதமருக்கு எதிராகப் பதிவுகள் இட்ட விமான ஓட்டி  மிகி மாலிக் என்பவரை கோ ஏர் விமான நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

இந்தியாவின் விலை குறைந்த விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றான கோ ஏர் என்னும் விமானச் சேவை நிறுவனத்தில் மிகி மாலிக் என்பவர் விமான ஓட்டியாகப் பணி செய்து வருகிறார்.  இவர் மூத்த விமான ஓட்டிகளில் ஒருவர் ஆவார்.  இவர் விமானப்படையில் பணி செய்தவர் ஆவார்.  அந்த கால கட்டத்தில் இவர் நாட்டுக்காகப் பல பணிகளை செய்துள்ளார்.

மிகி மாலிக் இலங்கை போரின் போது வவுனியாவுக்குப் பறந்துள்ளார்.  அத்துடன் சுனாமி அலை கொடூரத்தைக் காணப் பிரதமர் சென்ற போது விமான ஓட்டியாகப் பணி புரிந்துள்ளார்.  அது மட்டுமின்றி  கல்வானில் தளவாடங்களை எடுத்துச் சென்றுள்ளார்.  இவரது நாட்டுப்பணிகளைப் பலரும் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் சமீபத்தில் தனது சொந்த சுட்டுரைப் பக்கத்தில், “பிரதமர் ஒரு முட்டாள்.  நீங்கள் என்னையும் அப்படியே அழைக்கலாம்.  ஆனால் அது எனக்கு ஒரு பொருட்டல்ல.  ஏனென்றால் நான் பிரதமர் இல்லை.  ஆனால் பிரதமர் ஒரு முட்டாள்என பதிந்திருந்தார்.  இது கோ ஏர் நிர்வாகத்துக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது. எனவே மிகி மாலிக் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே மிகி மாலிக் தனது சுட்டுரைகளை நீக்கிய துடன் தனது சுட்டுரைக் கணக்கையும் முடக்கி வைத்துள்ளார்.  ஆயினும் அவர் நிர்வாகத்தினரால் பணி நீக்கம் செய்யப்பட் டுள்ளார்.  அவர் நாட்டுக்குப்  பல பணிகள் ஆற்றிய போதும் அதை கோ ஏர் நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அவரது தனிப்பட்ட கருத்துக்காக நிர்வாகத்தால் அவர் பழி வாங்கப்பட்டுள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Comments