‘‘தமிழ்நாடும் - தேர்தல் அரசியலும்!'' காணொலி சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர்
சென்னை,
ஜன. 7- தந்தை
பெரியார் அவர்கள், ஒவ்வொரு தேர்தலிலும், யார் வெற்றி பெறவேண்டும் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டுவார்கள். நம்முடைய நாட்டிலே, ஆரிய மனுதர்மத்தினுடைய திருவிளையாடல்கள், பல அவதாரங்களாக வரக்கூடிய
அளவிற்கு, ஒப்பனைகள் மூலமாக வரக்கூடிய அளவிற்கு அமைந்து கொண்டிருக்கின்றன. அந்த ஒப்பனைகளைக் கலைத்து, உண்மைகளை சொல்லவேண்டும் என்ற அவசியம் வருகின்ற காரணத்தினால்தான், தந்தை பெரியார் அவர்கள், தேர்தல் நேரத்தில் கடுமையாகப் பிரச்சாரம் செய்வார்கள் என்றார் திராவிடர்
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘தமிழ்நாடும்
- தேர்தல் அரசியலும்''
சிறப்புக்
கூட்டம்!
2.1.2021 அன்று மாலை காணொலிமூலம் நடைபெற்ற
‘‘தமிழ்நாடும் - தேர்தல் அரசியலும்!'' சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி அவர்
கள் உரையாற்றினார்.
அவரது
உரை வருமாறு:
பேரன்பிற்கும்,
பெருமதிப்பிற்கும் உரிய இந்த நிகழ்ச் சியைத் தொடங்கி வைத்த கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, நம் அனை வரையும் வரவேற்று உரையாற்றிய திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் செயல்வீரர் த.சீ.இளந்திரையன்
அவர்களே, இந்நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரை கூறவிருக்கக் கூடிய
வடசென்னை மாவட்ட கழக இளை ஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் அவர்களே,
மற்றும்
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேட்டுக் கொண்டிருக்கக் கூடிய உலகமெங்கும் இருக்கக் கூடிய நம்முடைய
திராவிட இனத்துப் பெருமக்களே, பொது மக்களே, அறிஞர்களே, இயக்கக் குடும்பத்தவர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக் கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தலில்
என்ன இவ்வளவு அக்கறை?
திராவிடர்
கழகம் ஒரு சமூகப் புரட்சி இயக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும். அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் 76 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் இயக்கத்தை, நீதிக்கட்சி என்பதை "திராவிடர் கழகமாக" மாற்றிய சேலம் மாநாட்டிலிருந்து, தேர்தலில் நிற்காத இயக்கம் என்று தன்னை அறிவித்துக் கொண்ட ஓர்
இயக்கத்திற்கு, தேர்தலில் என்ன இவ்வளவு அக்கறை? யார் வெற்றி பெற்றால் என்ன? யார் தோற்றால் என்ன? தமிழ்நாடும்
- தேர்தல் அரசியலையும்பற்றி இவர்கள் ஏன் பேசவேண்டும் என்று சிலர் நினைப்பார்கள்.
நாம்,
தேர்தலில் நிற்காதவர்களே தவிர, தேர்தலை நிர்ணயிக்க முடியாதவர்கள் அல்ல. தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய மக்கள் இயக்கம் திராவிடர் கழகம்.
இங்கே
கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல, அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை இருக்கக்கூடிய ஒரு சூழல் - நமக்குப் பதவி மேல் ஆசையில்லை. அதுபோல், பதவிக்கு வருகிறவர்களிடம் ஏதாவது சலுகைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக - இவரை ஆதரித்தார் - அவரை எதிர்த்தார் என்பதல்ல. இந்த இயக்கம் என்றும் மாறாத லட்சியங்களைக் கொண்ட இயக்கமாகும்.
கருப்புச்சட்டைக்காரர்கள்
காவலுக்குக் கெட்டிக்கார்கள்
ஜாதி
ஒழிப்பு, பெண்ணடிமை நீக்கம், பிறவி பேதம், சமூகநீதி - அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதி, எல்லோருக்கும்
கல்வி, காலங்
காலமாக மனுதர்மத்தினால் இங்கே மழுங்கிப் போயிருந்த ஒரு சமுதாயம், எழுச்சிப் பெறவேண்டிய காலகட்டம் - இதனை செய்வதற்கு எந்த ஆட்சி வந்தால், இவை எளிதாக நடைபெறுமோ - யார் ஆண்டால் நாடு
சிறப்பாக இருக்கமுடியுமோ - அவர்களைத்
தடுமாறுகின்ற மக்கள் மத்தியில், பல்வேறு போதைகளை வைத்துக் கொண்டு, மயக்க பிஸ்கெட்டுகளையெல்லாம் கொடுத்து, அவர்கள் கையில் இருக்கக்கூடிய வாக்குகளைப் பறித்துக்
கொண்டு ஓடலாம் என்று நினைக்கின்ற கொள்ளை யர்களைப்போல, இன்றைக்கு சில அரசியல் கட்சிக்காரர்கள் முயற்சி செய்கின்ற நேரத்தில், காவலாளியைப் போல தடுத்துக் கண்காணிக்கவேண்டிய மகத்தான
பொறுப்பு - "கருப்புச்சட்டைக்காரன் காவ லுக்குக் கெட்டிக்காரர்களான" நமக்கு உண்டு.
அந்த
அடிப்படையில்தான் நண்பர்களே, இந்தத் தலைப்பில் சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டது.
இன்னும்
4, 5 மாதங்களில் தேர்தல் வரவிருக்கின் றது. ஒருவேளை முன்கூட்டியே கூட அறிவிக்கப் படலாம். எப்படி இருந்தாலும், இப்போது தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகியோர் அவரவர்களின் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார்கள்!
இந்தக்
காலகட்டத்தில் ஊடகங்கள், அவரவர் களுடைய செல்வாக்குகளை (TRP rating) உயர்த்திக் கொள்வதற்காக செய்திகளை முந்தித் தருவதுபோல, போட்டிப் போட்டுக் கொண்டு செயல்படுவதுபோல - நமக்கு ஒன்றும் பரபரப்பு செய்தி முக்கியமல்ல.
நம்முடைய
இனம் - ஒடுக்கப்பட்ட சமுதாய மக் கள் - காலங்காலமாக மனுதர்மத்தினால், குலதர்மத் தினால், ஜாதியினால், கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு சமுதாயம் ஆகும்.
மனுதர்மத்தினுடைய
மண்டையிலடித்த இயக்கம் திராவிடர் இயக்கம்
"சூத்திரனுக்கு
எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே" - மாட்டைத் தொடலாம், ஆட்டைத் தொட லாம், நாயைத் தொடலாம், பூனையைத் தொடலாம் - ஆனால், என்
சகோதரனாக இருக்கின்ற உழைக்கும் எனது சகோதரனை, "தாழ்த்தப்பட்டவனாக்கி",
தொடக் கூடாதவனாக்கி, அவனை ஊருக்கு வெளியே நிறுத்தி - உழைப்பெல்லாம் அவனுடைய உழைப்பு- நிலமெல்லாம் அவனுடைய வேர்வை - அவன்தான் இந்த நாட்டில் உணவளிப்பதற்கு அடித்தளமாக இருக்கக் கூடியவன் - அவன் இந்த நாட்டில் ‘கீழ்ஜாதி' - கல்வி பெறக்கூடாத ஜாதி - உத்தியோகத்திற்கு வரக்கூடாத ஜாதி - இப்படியெல்லாம் நம் இன மக்களை ஒதுக்கி
வைத்த மனுதர்மத்தை - அதனுடைய மண்டையிலடித்த இயக்கம்தான் நமது திராவிடர் இயக்கம்.
அந்தக்
கொள்கை ஆளவேண்டும் - அந்தக் கொள்கையின்மூலம்தான் இழந்துவிட்ட உரிமைகளை நாம் திரும்பப் பெற முடியும். இந்த உணர்வூட்டவேண்டும். இடையில், இந்த எண்ணங்கள் எல்லாம் வராமல், வேறு எதை எதையோ சொல்லிக்கொண்டு, பகட்டுகளை, மற்ற வற்றையெல்லாம் செய்து கொண்டு போகக்கூடிய அள விற்கு சிலர்
இருப்பார்கள். உண்மைகளைச் சொல்லுகின்ற இயக்கம் நம்முடைய இயக்கம். உண்மைகளை மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற அந்தக் கருத்துள்ள இயக்கம் தந்தை பெரியாருடைய இயக்கம்.
‘‘உண்மை
விளக்கும் அச்சகம்''
அவர்
முதன்முதலாக, ‘குடிஅரசு' பத்திரிகை அச்சிடும் அச்சகத்திற்கு ‘‘உண்மை விளக்கும் அச்சகம்'' என்று தான் பெயர் வைத்தார்கள்!
அன்றைக்குத்
தொடங்கி இன்றைக்கு 50 ஆண்டு
களைத் தாண்டி நடந்து கொண்டிருந்த - இருக்கின்ற ‘குடி அரசு', ‘பகுத்தறிவு', ‘புரட்சி‘, ‘ரிவோல்ட்‘, ‘விடுதலை‘, ‘மாடர்ன் ரேசனலிஸ்ட்', ‘உண்மை' என்ற தலைப்புகளில் தான் ஏடுகள் நடைபெற்றன. இப்போதும் உண்மை என்ற தலைப்பில்தான் இருக்கிறது. ஏனென்றால், உண்மையைத் தவிர நாம் வேறு எதுவும் பேசவில்லை.
அறிவாசான்
தந்தை பெரியார் அவர்கள், பொதுக் கூட்டங்களில் ஒன்றை அடிக்கடி சொல்வார்கள், ‘‘நான் பொய் பேசவேண்டிய அவசியமில்லை. உண்மைக்கு மாறான செய்திகளை நாம் பேசவேண்டிய அவசியமில்லை. உண்மைகளை எடுத்துச் சொல்வதற்கே எனக்குநேரமில் லையே - நான்
எப்படி பொய் பேச முடியும்? பொய் பேச வேண்டிய அவசியம் என்ன? எனக்கு என்ன தேவை? நான் யாரைப் புகழவேண்டும்? யாரிடம் எதை எதிர்பார்க் கிறேன்? உச்சகட்டமாக ஒரு
மனிதன் எதிர்பார்ப்பது புகழ் - அது எனக்கு வேண்டாத ஒன்று'' என்று ஒதுக்கினார் தந்தை பெரியார். அதற்கடுத்தபடியாக பதவி - அது எனக்குத் தேவையில்லை.
ஆனால்,
இந்த
சமுதாயத்திற்குத் தேவை -
சமுதாயத்தினுடைய
பாதுகாப்புக்குத் தேவை -
சமுதாயத்தினுடைய
எழுச்சிக்குத் தேவை -
மறுக்கப்பட்ட
மனித உரிமைகள் மீட்கப்படவேண்டும் என்பதற்காக தேவை-
யார்
வெற்றி பெறவேண்டும் என்பதை
மக்களுக்கு
அடையாளம் காட்டுவார்
இதை
எண்ணித்தான் தந்தை பெரியார் அவர்கள், ஒவ்வொரு தேர்தலிலும், யார் வெற்றி பெறவேண்டும் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டுவார்கள்.
நம்முடைய
நாட்டிலே, ஆரிய மனுதர்மத்தினுடைய திருவிளையாடல்கள், பல அவதாரங்களாக வரக்கூடிய
அளவிற்கு, ஒப்பனைகள் மூலமாக வரக்கூடிய அளவிற்கு அமைந்து கொண்டிருக்கின்றன. அந்த ‘ஒப்பனை'களைக் கலைத்து, உண்மைகளை சொல்லவேண்டும் என்ற அவ சியம் வருகின்ற
காரணத்தினால்தான், தந்தை பெரியார் அவர்கள், தேர்தல் நேரத்தில் கடுமையாகப் பிரச்சாரம் செய்வார்கள்.
பறிக்கப்பட்ட
உரிமைகளை எப்படி மீட்டெடுப்பது- எப்படி சமத்துவத்தை உருவாக்குவது
நாம்
கூட்டணியில் பங்கு வகிக்கக் கூடியவர்களா? ஊராட்சி மன்றத் தேர்தல்களில் கூட நாம் நிற்காதவர்கள்! ஆனால், அது எப்படி அமையவேண்டும் - எப்படி அமைந்தால், இந்த நாட்டில் உள்ள மக்களுடைய கல்விக்குப் பாதுகாப்பு - ஒடுக்கப்பட்ட சமுதாய
மக்களின் பறிக்கப்பட்ட உரிமைகளை எப்படி மீட்டெடுப்பது- எப்படி சமத்துவத்தை உருவாக்க முடியும்?
திராவிடம்
என்றால் - சமத்துவம்
திராவிடம்
என்றால் - சம வாய்ப்பு
திராவிடம்
என்றால் - அனைவருக்கும் அனைத்தும்
திராவிடம்
என்றால் - ஆண் - பெண் பேதமற்ற ஒரு சூழல்
திராவிடம்
என்றால் - பகுத்தறிவு
சிந்தனையோடு அறிவியல் மனப்பான்மை
திராவிடம்
என்றால் - சகோதரத்துவம்
திராவிடம்
என்றால் - யாதும் ஊரே யாவரும் கேளிர்
இந்த
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவம், அது வருணாசிரம தருமத்திற்கு, மனுதர்மத்திற்கு நேர் எதிரானது.
இப்பொழுது
தேர்தல் களத்தைப் பார்த்தீர்களேயானால், இதுதான் போராட்டம். எனவேதான், திராவிடர் கழகத்திற்கு தேர்தல் முடிவுகளில் மிகுந்த அக்கறை.
நோய்க்
கிருமி இருக்கின்ற வரையில்,
நோய்
பரவாமல் இருக்குமா?
தேர்தல்
களத்தில், மிகத் தெளிவாக ஜாதி - வெளிப்போக்கிலே
சொல்லும்பொழுது, ஆகா, நாங்கள் ஜாதி வேற்றுமை பார்ப்பதில்லை என்று காவிகள்கூட இன்று சொல்கிறார்கள்.
‘‘வி
ஆர் நாட் 'டிஸ்கிரிமினியேட்டிங்'''
- பேதத்தை சொல்வது என்பது வேறு - ஆனால், ஏன் ஜாதி இருக்கவேண்டும்? ஜாதி இருக்கின்ற வரையில், பேதம் இல்லாமல் இருக்குமா? நோய்க் கிருமி இருக்கின்ற வரையில், நோய் பரவாமல் இருக்குமா? என்பதுதான் அடிப்படையானது கேள்வி.
ஆகவே,
அந்த அடிப்படையில்தான் நமக்கு அக்கறை. திராவிடர் கழகத்திற்கு ஏன் இந்த அக்கறை? தேர்தலில் நிற்கின்றவர்களைவிட நமக்குத்தான் அதிகக் கவலை. யார் வெற்றி பெறவேண்டும் என்ற கவலை ஒருபக்கம் இருந்தாலும், யார் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதை நாம் சொன்னோம்.
கடந்த
2013 ஆம் ஆண்டிலேயே இந்திய நாட்டிற்கு நாம் அறிவித்தோம். பா.ஜ.க., காவி
ஆட்சி டில்லியில் அமர்ந்தால், வித்தைகள் காட்டி அமர்ந்தால், அதற்கு நீங்கள் ஏமாந்தால், நிச்சயமாக கடும் விலையை நீங்கள் கொடுக்கவேண்டி இருக்கும் என்று சொன்னோம்.
ஆனால்,
என்ன நடந்தது அன்றைக்கு?
வளர்ச்சி
ஏற்படவில்லை -
தளர்ச்சிதான்
ஏற்பட்டு இருக்கிறது!
சில
பல வாக்குறுதிகள் - 18 வயதுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு - குஜராத் மாடல் என்றெல்லாம் சொன் னார் மோடி. ‘சப்கா சாத் - சப்கா விகாஸ்' என்றெல்லாம் வேகமாக சொல்லி, வளர்ச்சி, வளர்ச்சி என்றெல்லாம் ஏமாற்றினார்கள். வளர்ச்சியா ஏற்பட்டு இருக்கிறது?
நாட்டில்
தளர்ச்சிதான் ஏற்பட்டு இருக்கிறது!
வாக்குறுதியை
அள்ளிவிட்டார்கள் - ஏமாந்தார்கள் மக்கள் - ஏமாறாதீர்கள் என்று அன்றைக்கே எச்சரித்த ஒரே இயக்கம் நமது திராவிடர் கழகம்.
அதன்
காரணமாகத்தான் தமிழ்நாட்டில், அவர்களு டைய சரக்கு செலாவணி ஆகவில்லை. அதேநேரத்தில், இந்த விழிப்புணர்ச்சி வடபுலத்தில் இல்லை - மற்ற பகுதிகளில் இல்லை.
அவர்கள்
என்ன வாக்குறுதியை அன்றைக்குக் கொடுத்தார்கள்?
ஆண்டொன்றுக்கு
2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார்கள்.
ஒவ்வொரு
குடிமக்களின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றார்கள் - இன்றைக்கு 15 ரூபாய்கூட வரவில்லையே?
ஆனால்,
அதைப்பற்றி யாரும் இன்றைக்கு நினைத்துப் பார்க்கவில்லை. அதைப்பற்றியும் கவலைப்படவில்லை. வித்தைகள், வித்தைகள் மிகப்பெரிய வித்தைகள். அவர் களிடம் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடக்கக் கூடிய ஓர் ஆட்சி இந்த
தமிழ்நாட்டில். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால், அன்றைக்குக் கலைஞர் ஆட்சி மீண்டும் வராத காரணத் தினால்தான், நிலைமை தலைகீழாக மாறியது.
எனக்கு
தொலைநோக்கு கிடையாது -
பெரியார்
நோக்குதான்; அதிலே தொலைநோக்கு அடங்கியிருக்கலாம்!
அருமை
நண்பர்களே, தந்தை பெரியார் என்ற நம்முடைய அறிவாசான் அவர்களின் தொலைநோக்கு இருக்கிறதே - கவிஞர் அவர்கள் இங்கே உரையாற்றும் பொழுது, எனக்கு தொலைநோக்கு இருக்கிறது என்று சொன்னார்; எனக்கு தொலைநோக்கு கிடையாது - எனக்கு பெரியார் நோக்கு- அதிலே தொலைநோக்கு அடங்கியிருக்கலாம். அவ்வளவுதான்!
ஆனால்
, நம்மை எதிர்கொண்டிருப்பது தொல்லை நோக்கு - அந்தத் தொல்லை நோக்கைத் தோற்கடிக்க வேண்டும் - விரட்டியடிக்கவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
அந்தத்
தொல்லை நோக்கு, எப்படியெல்லாம் ஒரு போக்கை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை நாம் இன் றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
எனவேதான்,
பொய்யான வாக்குறுதியை கொடுத்தார் கள்; மீண்டும் அதே வாக்குறுதியை சொன்னார்கள், வடபுலத்தில் அந்த வாக்குறுதிகளை கண்டு அப்பாவி மக்கள் ஏமாந்தார்கள்.
தப்புக்
கணக்குப் போட்டார்கள்
ஆனால்,
2019 இல் என்ன நடந்தது? நாடாளு மன்றத் தேர்தலில் என்ன நடந்தது?
கலைஞர்
இல்லை, ‘‘ஆகா, நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம்; தளபதி ஸ்டாலினால் பெரிய அளவில் சாதித்து விட முடியாது'' என்றெல்லாம் இங்கே தப்புக் கணக்குப் போட்டார்கள். முடிந்ததா?
ஆனால்,
அதற்கு முன்பே கொள்கை ரீதியாக உருவான கூட்டணி - ஒவ்வொரு போராட்டத்திலும் முகிழ்த்துக் கிளம்பிய கூட்டணி -அந்தக் கூட்டணி வெறும் தேர்தலுக்காக அல்ல. இன்றைக்கு சிலர் வருகிறேன், வரவில்லை - காணாமல் போகிறேன் - திரும்ப வரவில்லை என்றெல்லாம் சொல்வது இருக்கிறதே - அரசியலுக்கு வரவில்லை - மாறாக, தேர்தலுக்கு வருகிறார்கள். தேர்தலைக் கண்டு பயப்படுகிறார்கள்.
ஆனால்,
நாம் தேர்தல், அரசியல் அத்தனையும் தாண்டி, மிகப்பெரிய அளவிற்கு, ஓர் இனத்தின் பாதுகாப்பு - பெரும்பான்மை மக்களான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையெல்லாம் எப்படி பாதுகாத்து, அதனை நிலைநாட்டுவது என்பதற்கான வாய்ப்பாகப் பார்க்கிறோம்.
திராவிடர்
கழகம் பின்னணியிலே வலுவாக மிகப்பெரிய அளவிற்கு நின்றது
எனவே,
அந்த அடிப்படையில் பார்க்கின்ற நேரத்தில், இன்றைக்கு மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் திரா விடர் கழகம் தன்னுடைய பங்கை தவறாது அளிக்கிறது.
அன்றைக்கு 1971 இல் சேலத்தில்
எப்படி ஒரு தவறான பிரச்சாரத்தை செய்தார்களோ - ராமனைக் காட்டினார்களோ அதுபோல, கடந்த தேர்தலில்கூட பெரியார் இல்லை என்ற நினைப்பை வைத்துக்கொண்டு, திரு.வீரமணிதானே, கிருஷ்ணனைக்
காட்டலாம் என் றெல்லாம் பார்த்தார்கள். ஆனால், திராவிடர் கழகம் பின்னணியிலே வலுவாக, மிகத் தெளிவாக சொன்னார் தி.மு.க.
தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்
அவர்கள், ‘‘எங்களுக்குப் பெரியார் திடல்தான் கலங்கரை விளக்கம் - கலங்கரை வெளிச்சம். நாங்கள் அதிலிருந்து வெளியேற வேண்டிய அவசியம் கிடையாது. திராவிடர்
கழகம் காட்டுகின்ற பாதைதான் எங்களுக்கும் வழி'' என்று சொன்னார்கள்.
அந்த
வழி சரியான வழி - நேரிய வழி - அது வெற்றி யைத் தரக்கூடிய வழி என்பதை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். இந்தியாவே அப்பொழுது கலகலத்துப் பார்த்தது.
- தொடரும்