பாப்பிரெட்டிப்பட்டியில் தகடூர் புத்தகப் பேரவை - விடுதலை வாசகர் வட்டம் இணைந்து நடத்திய புத்தகத்திருவிழா!

தர்மபுரி, ஜன. 12- தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டியில் தகடூர் புத்தகப் பேரவை, விடுதலை வாசகர் வட்டம் இணைந்து நடத்திய இரண்டு நாள் புத்தகத் திரு விழா ஜனவரி 4 மற்றும்  5ஆம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தொடர்ந்து இரண்டு நாட் கள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு விடுதலை வாசகர் வட்ட தலைவர் கு. தங்கராஜ் தலைமையேற்றார்.தருமபுரி முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் டாக்டர் இரா.செந்தில் புத்தக விற் பனையை தொடங்கிவைத்து பேசினார் .                                                                                                       

மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் பாவலர் பெரு. முல்லையரசு பாப்பிரெட்டிப்பட்டி மருத் துவர் மாணிக்கம், ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற் பாட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழ கத் தலைவர் மாரி. கருணாநிதி, பாப்பிரெட்டிப்பட்டி விடு தலை வாசகர் வட்ட செயலா ளர் மா.பூங்குன்றன் ஆகி யோர் செய்து ஒருங்கிணைத்து நடத்தினர்.

புத்தக திருவிழாவில் மண் டல திராவிடர் கழகத் தலை வர் .தமிழ்ச்செல்வன், தரும புரி நகர தலைவர் கரு .பாலன், வாசகர் வட்ட அமைப்பாளர் அமுதகொடை ,ஆசிரியர்கள் திராவிடன்,  இராஜவேங் கன், அன்பரசு மற்றும் அரசு ஊழியர்கள் சமூக ஆர்வலர் கள்  கலந்துக்கொண்டனர்.

விடுதலை வாசகர்வட்டம் சார்பில் தருமபுரி பெரியார் புத்தக நிலையம் புத்தக திரு விழாவில் இடம் பெற்றன.

Comments