பொதுக்குழு உறுப்பினர் ந.கமலம் இணையர் சொ.நடராஜன் படத்திறப்பு

நாகை, ஜன. 12- நாகை மாவட் டம் குருக்கத்தி பெரியார் நகரைச் சார்ந்த பொதுக்குழு உறுப்பினர் .கமலத்தின் இணையர் சொ.நடராஜனின் படத்திறப்பு 09.01.2021 அன்று காலை 11 மணிக்கு  அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

நாகை மாவட்ட திராவி டர் கழகத் தலைவர் வி.எஸ். டி..நெப்போலியன் தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ் குப்தா, திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாவட்ட துணை செயலாளர் பாவா.ஜெயக்குமார், மகளிரணி மாவட்ட தலைவர் இரா.பேபி ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் படத்தை திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினார். கழக சொற் பொழிவாளர் ராம அன்பழ கன் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.

திருவாரூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் இரா.சிவகுமார், நாகை மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் . தங்கராசு, ஒன்றிய செயலாளர் .பன் னீர்செல்வம், ஒன்றிய துணைத் தலைவர் .அரங்கராசன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் மு.குட்டிமணி, கீழையூர் ஒன்றிய தலைவர் ரங்கநாதன், மாவட்ட இணை செயலாளர் இரா.ராமலிங் கம், வட்டார விவசாய அணி அமைப்பாளர் தமிழ்ச்செல் வன், ஊராட்சி மன்ற துணை தலைவர் பிரபாகரன் மற்றும் பரமேஸ்வரி ஆகியோர் இரங் கல் உரை நிகழ்த்தினர்.

Comments