அத்துமீறி நடந்துகொண்ட அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யவேண்டும்!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டிரம்ப், அதனை ஒப்புக்கொள்ள மறுத்த நிலையில், தனது ஆதரவாளர்களைத் திரட்டி, அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்ததினுடைய விளைவு, துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்க அரசியல் சட்டத் திருத்தம் 25 ஆவது பிரிவின்படி அத்துமீறி நடந்துகொண்ட அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்து ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பது உலக ஜனநாயக ஆர்வலர்களின் கருத்தாகும்!

Comments