ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     ஆந்திராவில் கோயில்களை சேதப்படுத்தியதில் பாஜக, தெலுங்கு தேசக் கட்சியினர் ஈடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில டி.ஜி.பி. கூறியுள்ளார்.

·     மாநிலத்தில் உள்ள சிறிய துறைமுகங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் மசோதாவிற்கு ஆந்திர மாநில அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

·     அயோத்தியில் ராமன் கோயில் கட்டுவதற்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ரூ. அய்ந்து லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

·     இருமுறை பதவி நீக்க நடவடிக்கைக்கு உள்ளான அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து தண்டிக்க செனட்டுக்கு அதிகாரம் உள்ளது என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களவை துணை தலைவர் பதவி காலியாகவே உள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·   மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் இயக்கத்திற்கு ஆதரவாக இந்திய அறிவியல் நிறுவனம், அய்.அய்.டி கள், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தத்துவார்த்த அறிவியல் சர்வதேச மய்யம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் கையொப்பமிட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

- குடந்தை கருணா

16.1.2021

Comments