கருநாடக அரசின் பிற்போக்குத்தனம்! பகுத்தறிவாளர் கே.எஸ் பகவான் நூல்கருநாடக அரசு நூலகங்களில் இடம்பெறக் கூடாதாம்!

கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த திரு.கே.எஸ் பகவான் ஒரு தலைசிறந்த பகுத்தறிவாளர் ஆவார். மூட நம்பிக்கைகளை எதிர்ப்பதில் எவர்க்கும் அஞ்சாதவர். துணிந்து கருத்து களை முன்வைத்து வருவதால் வழக்குகள் பலவற்றைச் சந்தித்தவர். தொடர்ந்து இந்துத் துவவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகி வருபவர்.

அவர் "இராமன் கோயில் ஏன் வேண் டாம்?" (ராம மந்திர யேக்க பேடா?) என் னும் தலைப்பில் கன்னடத்தில் ஒரு நூல் எழுதியுள்ளார். அந்த நூலை உடனே  சங்பரிவார்கள் எதிர்க்கத் தலைப்பட்டனர்.

இந்த நூல் பொதுமக்கள் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடும் என்பதால், அதனைக் கருநாடக அரசு நூலகங்களுக்கு வாங்கக் கூடாது என்று மாநில அரசின் கல்வி அமைச்சர் எஸ்.சுரேசு குமார் கூறியுள்ளார்.

இந்தத் தடை குறித்துக் கருத்து அறிவித்த திரு.கே.எஸ் பகவான்,

'ஒரு மக்களாட்சியில் கருத்துரிமைக்குத் தடை இருக்கக் கூடாது. ஒரு நூல் கெட் டதா நல்லதா என்பதை மக்கள்தான் தீர் மானிக்க வேண்டுமே ஒழிய, ஓர் அரசோ, அமைச்சரோ தீர்மானிக்கக் கூடாது. இந்த நூல் 2018 ஆம் ஆண்டிலிருந்து மூன்று பதிப்புகள் வெளிவந்து விற்றுத் தீர்ந்துள்ளன. இந்த நூல் தமிழ், மலையாளம், மராத்தி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஒரு படைப்பாளியின் கருத்துகள் எவ்விதத் தடையுமில்லாமல் சமூகத்தில் பரவும் உரிமை வேண்டும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்.அறிவியல் மனப்பான்மை, மாந்தநேயம், கேள்வி கேட்கும் உணர்வு,  சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்துக்.கொள்ள வேண்டுமென்றும் இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது. இந்த நூலில் நானாக எவற்றையும் கற்பனை செய்து திணிக்கவில்லை. மூலநூலான வால்மீகி இராமாயணத்தின் அடிப்படையிலேயே கருத்துகளைத் தொகுத்து வழங்கியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

அரசு நூலகங்களுக்கு வாங்குதற்குரிய நூல்களின் பட்டியலில் இந்த நூல் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இது வரையில் நூலகங்களுக்கு வாங்கப்படவில்லை என்று அமைச்சர் கூறி யுள்ளார்.  இந்த நூலின் கருத்துகள் ஏற்கத் தக்கன அல்ல என்று பிஜேபியினர் கூறிய எதிர்ப்பே காரணம் என்பதும் தெளிவாகிறது.

முற்போக்காளர் பரகூர் இராமசந்திரப்பா, "நூலகம் என்பது வாசகர்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்துப் படிக் கும் இடம் ஆகும். பகவானுடைய கருத்து களை ஏற்பதும் தள்ளுவதும் வாசகர்களின் உரிமை. அதனை நூல்கங்களில் இடம் பெறச் செய்யமாட்டோம் என்பது அறிவுடைமையாகாது" என்று கூறியுள்ளார்.

சங் பரிவாரத்தினரின் எதிர்ப்புக்குத் தலைவணங்கி, ஆறாம், ஒன்பதாம் வகுப் புப் பாட நூல்களில் வேத காலத்தில் வேள்விகளில் விலங்குகளையும், உணவுப் பொருள்களையும் அவியாக இட்டதால் பஞ்சம் ஏற்பட்டது என்று இருந்த பகு தியை நீக்கியவரும் இதே சங் பரிவார் அமைச்சர்தான். அது போலவே சமஸ்கிருதம் மக்கள் மொழியாக இருக்கவில்லை என்று அந்தப் பாட நூல்களில் இருந்த பகுதியையும் நீக்கியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

Comments