வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிபந்தனையின்றி திரும்ப பெற வேண்டும்

சோனியா காந்தி வலியுறுத்தல்

டில்லி, ஜன.4, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று (3.1.2021) வெளியிட்டுள்ள அறிக் கையில், ‘‘ஒரு ஜனநாயக நாட் டில் பொதுமக்களின் உணர்வு களை புறக்கணிக்கும் எந்த அரசும், அவற்றின் தலைவர் களும் நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியாது.

செல்வாக்கை பயன்படுத்தி எளிதாக பணியை முடிப்பது என்ற மத்திய அரசின் கொள்கைக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஒருபோதும் தலைவணங்க மாட்டார்கள். பிரதமர் மோடி அரசானது தனது அதிகாரத்தின் ஆணவத்தை விட்டுவிட்டு குளிர் மற்றும் மழையில் இறந்து கொண்டு இருக்கும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 3 கறுப்பு வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும். இது தான் அரசநீதி. உயிரிழந்த விவசாயிகளுக்கு செலுத்தப்படும் உண்மையான மரியாதையாகும்’’ என்றார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது சுட்டுரைப் பதிவில், “இந்த நாடானது ஆங்கிலேயர்களுக்கு எதிராக காந்தியார் நடத்திய அகிம்சை போராட்டத்தை போன்ற ஒரு சம்பவத்தை எதிர்கொள்கிறது. அப்போது ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள். இப்போது மோடியும் அவர்களது நண்பர்களும் அதுபோன்று நடந்து கொள்கின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு விவசாயியும் 'சத்தியாகிரஹி' அவர்கள் தங்களது உரிமையை திரும்ப பெறுவார்கள்என குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்

சென்னை,ஜன.4 வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், 10ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக வளி மண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டு கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத் துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

 

தமிழகத்தில் புதிதாக 867 பேருக்கு கரோனா தொற்று உறுதி

சென்னை, ஜன.4 தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று  (3.1.2021) வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் புதிதாக 867 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா வால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 712 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று  10 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

 

 

Comments