தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்

பெரியகுளம். ஜன. 11- தந்தை பெரியார் 47ஆம் ஆண்டு நினைவு நாள், பெரிய குளம் கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமண மண்டபத்தில் மாணவர்கள் பேச்சுப்போட்டி மற்றும் பேராசிரியர்கள் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட கழகத் தலைவர் பொறியாளர் .ரெகுநாதநாதன் தலை மையில் பொதுக்குழு உறுப்பினர் மு. அன்புக்கரசன் வரவேற்புரை ஆற்றினார்.

பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தா தேவி, பெரியகுளம் விளையாட் டுக் கழக தலைவர் மணிகார்த்திக் முன்னிலை வகித்தனர். 20 மாணவ - மாண விகள் பெரியார் பற்றியும், எம்.ஜி.ஆர். பற்றியும் பேசி பரிசு பெற்றனர்.

கிழவன் அல்ல கிழக்குச் சூரியன் பெரியார் -- முனைவர் யாழ்ராகவன், வைக்கம் போராட்டத்தில் பெரியார் கற் பூரபூபதி, தந்தை பெரியார் நம்வழிகாட்டி -- .சி.சிவபாலு, சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர். - நல்.வாஞ்சிநாதன், எட்டாம் வள்ளல் - எம்.ஜி.ஆர். முத்துக்குமார், சிக்கனத்தின் சிகரம் பெரியார் -- கவிஞர் கவிக்கருப்பையா, பெரியாரும் பெண் விடுதலை சிந்தனையும் -- ஜெ.மெகபூப் பீவி ஆகியோர் கருத்தரங்கில் பேசினர். ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். ஆலிம்அகமது முஸ் தபா நன்றி கூறினார்.

Comments