புதிய வேளாண் சட்டங்களை சிறிது காலத்திற்கு நிறுத்திவைக்க முடியுமா?

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, ஜன.11 புதிய வேளாண் சட்டங்களை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்க முடியுமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது

மத்திய அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றிய மூன்று புதிய வேளாண் சட் டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி தலை நகர் டில்லியில் லட்சக் கணக்கான விவசாயிகள் குடும்பத்தோடு போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை எல்லாம் அலட்சியப்படுத்திய மத்திய அரசு எதிர்கட்சியினரின் சூழ்ச்சி என்று கூறி போராட் டத்தை திசைதிருப்பி வருகிறது. இருப்பினும் விவசாயிகள் தங் களின் கோரிக்கையை வலியுறுத்தி தங்கள் போராட்டத்தை கடுமை யாக்கி வரு கின்றனர்.

சுமார் 50 நாளைத் தொட விருக்கும் இந்தப் போராட் டத்தை ஒடுக்க மத்திய அரசு பேச்சு வார்த்தை என்ற பெயரில் எட்டு முறை நாட கமாடியது. ஆனால் விவசாயிகள் அரசின் நாடகத்தைப் புரிந்துகொண்டு பேச்சு வார்த் தையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியுமா முடியாதா என்ற கோரிக்கையை முன் வைத்து போராடி வருகின்றனர் ஆனால் மத்திய அரசு தொடர்ந்து வேளாண் சட்டத்தை ரத்து செய்ய முடியாது. ஆண்டு முழுவதும் கூட போராட்டத்தை நடத்திக் கொள் ளுங்கள் என்று மனிதாபிமானமற்ற முறையில் கூறி வருகிறது.

 இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்கள் குறித்த வழக்கை  உச்சநீதி மன்றம் மீண்டும் விசார ணைக்கு எடுத்தது

விவசாயிகள் கடுங்குளிரில் போராடி வரும் நிலையில், மத்திய அரசு எடுத்த நட வடிக்கைகள் குறித்தும்,   புதிய  வேளாண் சட் டங்களை நிறுத்திவைக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் விவசாயிகள் போராடி வரும் சூழலில் விவசாய சட்டங் களை நிறுத்தி வைக்காதது ஏமாற் றத்தை அளிக்கிறது. அரசு விரைவில் இதற்கு ஒரு முடிவை எட்டா விட்டால் நீதிமன்றம் இதில் தலையிடவேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.


Comments