தமிழக மீனவர்கள் நால்வர் நடுக்கடலில் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டதைக் கண்டித்து

வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்

சென்னை,ஜன.25- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இலங்கை அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து இன்று (25.1.2021)மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடு தலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி, இந்திய கம்யூ னிஸ்ட்கட்சி மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன்,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட் டம் கோட்டைப்பட்டினத் தில் இருந்து கடந்த 18ஆம் தேதி 214 விசைப்படகுகளில் 700-க்கும் அதிகமான மீனவர் கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மெசியா (வயது 50), உச்சிப்புளி வட்டாண்வலசை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (45), திருப்புல்லாணி ஒன்றி யம் தாவனேந்தல் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (28), மண்டபம் இலங்கை அகதி முகாமை சேர்ந்த டார்வின் சாம்சன் (27) ஆகியோரது படகு மீது இலங்கை கடற் படை படகு மோதியது. இதில் மீனவர்களின் படகு மூழ்கி 4 மீனவர்களும் பலியானர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து புதுக்கோட்டை, ராமேசுவரத்தில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப் பட்ட மீனவர்களின் உடல் களில் காயங்கள் இருந்ததால் அவர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உடற்கூராய்வு பரிசோதனை முடிந்து, நேற்று முன்தினம் தமிழகத்திற்கு வந்தது. இலங்கை கடற்படையினரின் இந்த வெறிச்செயலுக்கு பல் வேறு தரப்பினரும் கண்ட னம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை வள் ளுவர் கோட்டம் அருகில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக, மதிமுக, விடுதலைசிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள் ளிட்ட பல்வேறு அமைப்புக ளின் சார்பில் பலர் பங்கேற் றனர்.

Comments