நி(க)லவரம்
கழிவு
நீரை அகற்றக் கோரி சமூக ஆர்வலர் ஒருவர் பல்லாவரம் நகராட்சியைச் சேர்ந்த புதுவை நகர்ப் பகுதியில் கழிவு நீரில் அமர்ந்து போராட்டம்.
இதற்கெல்லாம்
கூடப் போராட வேண்டிய அளவுக்குத் தான் நாட்டு நிலவரம் இருப்பது பரிதாபமே!
ஏன்
பகோடா விற்கலாமே!
வேலையில்லாத்
திண்டாட்டம் மோடி ஆட்சியில் 9 புள்ளி ஒரு சதவிகிதமாக உள்ளது: - ராகுல் காந்தி எம்.பி.
ஆண்டுக்கு
இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று கூறிய மோடி ஆட்சியிலா இப்படி? ஏன் பகோடா விற்பதும்கூட வேலைதான் என்று பிரதமர் மோடி கூறியதுண்டே!
திருக்குறளை
தேசிய நூலாக அறிவிக்கட்டும்!
பிரதமர்
நரேந்திர மோடி அடிக்கடி திருக்குறளை எடுத்துக்காட்டுகிறார்.
பிறப்பில்
பேதம் - ஜாதி பேதம் உடைய இந்துராஷ்டிரத்தை அமைக்கப் போவதாகக் கூறுவோர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறும் திருக்குறளை எடுத்துக் காட்டுவது எப்படி?
திருக்குறளை
தேசிய நூலாக அறிவிப்பாரா?
தொல் உலகை ஆளும் கை!
வட
துருவத்தின் வான் வழியாக சான்பிரான்சிஸ்கோ - பெங்களூரு விமானத்தை எங்கும் நிறுத்தாமல் பெண் விமானிகள் இயக்கி சாதனை.
வாய்ப்பைக்
கொடுத்துப் பாருங்கள் - சாதித்துக் காட்டுவர் பெண்கள். ‘‘தொட்டிலை ஆட்டும் கை தொல் உலகை
ஆளும் கை!'' - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
ஓ,
தேர்தல் வருகிறதே!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பொங்கல் விழாவில் சென்னை மூலக்கடையில் பங்கேற்கிறார்.
பொங்கலுக்கு
இருந்து வந்த அரசு விடுமுறையை ரத்து செய்த ஆ(க)ட்சிக்காரர்களுக்கு
திடீரென பொங்கல் மீது என்ன ஆறாக் காதல்?
ஓ,
தேர்தல் வருகிறதோ!
மதம்+ஜோதிடம்= மோசடி!
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி என்று கூறி பெண்ணிடம் ரூ.8.3 கோடி ஏமாற்றிய ஜோதிடர்!
மதமும்,
ஜோதிடமும் ஒன்று சேர்ந்தால், அது மோசடி என்று பொருளா?
நம்புங்கள்,
இந்தியா வளர்கிறது!
இராணுவத்துக்கு
ரூ.3.37 லட்சம் கோடி செலவழிக்கும் இந்தியா, அதில் கால் பங்கைக் கூட மருத்துவத்துக்குச் செலவழிப்பதில்லை.
0.3 விழுக்காடுதான்
மருத்துவத்துக்கு.
2046 பேருக்கு ஒரு படுக்கை வசதி என்னும் நிலை.
ஆம்,
இந்தியா வளர்கிறது நம்புங்கள்!
கலவரம்
அவர்களுக்குச் சர்க்கரைப் பொங்கல்!
மதுரையில்
பொங்கல் விழா என்ற பெயரில் மோதல்.
எங்காவது
கலவரம் நடக்காதா? அதை வைத்துக் குளிர் காய முடியாதா என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் திட்டம்! கலவரம் என்பது அவர்களுக்குச் சர்க்கரைப் பொங்கல், எச்சரிக்கை!