டில்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்

100 கி.மீ. தூரத்துக்கு நாளை டிராக்டர் பேரணி

புதுடில்லி, ஜன. 25- மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டில்லியில் 61ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர் கிறது. டில்லியில் நாளை டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயி கள், டில்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் டிராக் டர்களில் செல்கின்றனர்.

டில்லியில் குடியரசு நாளான (26.1.2021) நாளை 2 லட்சம் டிராக்டர்கள் பங் கேற்கும் மாபெரும் பேர ணியை விவசாயிகள் நடத்து கின்றனர். இதற்காக, நாட் டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து டில்லியை நோக்கி டிராக்டர்கள் படையெடுத்து வருகின்றன. 100 கிமீ தூரம் நடத்தப்படும் இந்த பேரணிக் காக, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டில்லி எல்லையில் நேற்றும் 60ஆவது நாளாக விவசாயி கள் முற்றுகை போராட் டத்தை தொடர்ந்தனர். 61ஆவது நாளாக இன்றும விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கி றது. விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. இச்சட்டத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாகவும், மத்திய அரசு - விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்குழுவை அமைத்து, இச்சட்டங்கள் தொடர்பான பிரச்சினை களை தீர்க்கலாம் என்றும் மத்திய அரசு கூறியதை விவ சாய சங்கங்கள் நிராகரித்து விட்டன.

டில்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். எனவே, டில்லி வெளிவட்டச் சாலை யில் சிங்கு, காஜிபூர், திக்ரி, பல்வால் மற்றும் ஷாஜகான் பூர் எல்லைகளில் இருந்து விவசாயிகள் இந்த பேர ணியை நடத்துகின்றனர். பேரணியை அமைதியாக நடத் துவதாக விவசாய சங்கங்கள் அளித்த வாக்குறுதியை ஏற்று, இந்த அனுமதி வழங் கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பேரணியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை விவசாய சங் கங்கள் முழுவீச்சில் செய்து வருகின்றன.

பேரணியில் பங்கேற்பதற் காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து டில் லியை நோக்கி டிராக்டர்களு டன் விவசாயிகள் படையெ டுத்து வருகின்றனர். நாளைய பேரணியில் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லி ராஜபாதையில் இராணுவ அணிவகுப்பு, கலை நிகழ்ச் சிகள் நடத்தப்படும் நிலை யில், டில்லிக்கு வெளியே விவ சாயிகள் இந்த பேரணியை நடத்துகின்றனர்.

போராட்ட ஏற்பாடுகள் குறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்க பிரதிநிதிகள் நேற்று கூறிய விவரம் வருமாறு: விவசாயி களின் போராட்டத்தையும், விவசாய தொழில்நுட்பங்க ளையும் விளக்கும் அலங்கார வாகனங்களும் பேரணியில் இடம் பெறும். அனைத்து டிராக்டர்களிலும் தேசியக் கொடி பறக்கும். விவசாயிகள் ஏற்கெனவே போராட்டம் நடத்தி வரும் சிங்கு, திக்ரி, காஜிபூர், பல்வால் மற்றும் ஷாஜகான்பூர் எல்லைகளில் இருந்து பேரணி புறப்படும். மாலை 6 மணி வரையில், 100 கிமீ தூரத்துக்கு பேரணி நடத்தப்படும்.  டில்லியில் குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிந்ததும், பேரணி தொடங் கப்படும். பேரணி செல்லும் சாலைகளில் 40 இடங்களில் ஆம்புலன்சுகள் நிறுத்தப் படும். ஒரு டிராக்டரில் 5 பேர் மட்டுமே அமர்வதற்கு அனு மதி அளிக்கப்படும். பேரணி முடிந்ததும், புறப்பட்ட இடத் துக்கே அனைத்து டிராக்டர்க ளும் திரும்பி வரும். பேரணி மிகவும் அமைதியாக நடை பெறும். குடியரசு நாள் விழா நிகழ்ச்சிக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

டிராக்டர் பேரணிக்கான பாதை  இறுதி செய்யப்பட உள்ள நிலையில் அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் தங்களது டிராக்டர்கள், கார்களில் பயணித்து வருகின் றனர். ஆனால், அவர்களை தடுக்கும் வகையில்,  பாஜக ஆளும் உத்தரபிரதேசம், அரி யான மாநிலங்களில் விவசாயிகளின் டிராக்டர்களுக்கும், கார்களுக்கும்  பெட்ரோல், டீசல் வழங்க மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. மாநில அரசின் மிரட்டலின் காரண மாக, பெட்ரோல் பங்குகளில் டீசல் வழங்கப்படுதாக விவ சாயிகள் சங்கத்தினர்  குற்றம் சாட்டி உள்ளனர்.

Comments