காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும்

கே. பாலகிருஷ்ணன், தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, ஜன.19 காட்டுப்பள்ளி துறைமுக விரிவாகத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலை வர் திருமாவளவன் வலியுறுத்தி யுள் ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் விவரம்:

கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்ட அறிக்கை: எல் அண்ட் டி நிறுவ னத்தின் சிறிய துறைமுகத்தை 2018இல் அதானி குழுமம் வாங்கியது. அதனை ஒரு பெரும் வர்த்தக துறைமுகமாக சுமார் 6000 ஏக்கர் அளவில் விரிவாக்கம் செய்ய அதானி குழுமம் திட்டம் தயாரித்துள்ளது. சுமார் 53 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப் படவுள்ள இந்த துறைமுகத்தின் சுற்றுச்சூழல், சூழல் தாக்க மதிப்பு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட் டுள்ளது. இந்த அறிக்கைகள் முழு மையாக தமிழில் மக்களிடம் கிடைக்க வழிவகை செய்யாமல் கருத்துக்கேட்பு கூட்டம் வரும் 22ஆம் தேதி நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்கள் அதிகமாக வுள்ள காட்டுப்பள்ளியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் மீஞ்சூரில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தால் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கும் வழியில்லை. வெறும் 1500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், அதானி பெரும் லாப வேட்டை நடத்திட இந்த திட்டம் வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணைபோகக் கூடாது.

தொல்.திருமாவளவன் எம்.பி.,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: சென்னை காட்டுப் பள்ளி துறைமுகத்தின் விரிவாக்க மானது, அதானி குழுமத்தின் ஆக் டோபஸ் பேராதிக்கமாகும். அதானி குழுமத்திற்கு சேவை செய்வதே தனது தலையாயக் கடன் என, துளியும் கூச்சமின்றி அதானிக்கு பணிவிடை ஆற்றிவரும் மோடியின் தலைமையிலான கார்ப் பரேட் அரசும், தமிழகத்தில் எடப்பாடி பழனி சாமி தலைமையிலான மோடி யின் பொம்ம லாட்ட அரசும் கூட்டு சேர்ந்து அதானிக்கு ஒத்துழைத்து வருகின்றன.

இத்திட்டத்திற்காக சட்டப்படி யான சில சடங்குகளை செய்யும் வகையில், வரும் 22ஆம் தேதி பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தவுள்ளன. இத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டால், அப்பகுதி வாழ் மீனவர்கள் மட்டுமின்றி, அனைத்து சமூக பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஏறத்தாழ நான்காயிரம் ஏக்கருக்கும் மேலான அளவில் நிலப்பரப்பை ஆக்கிரமிக்க உள்ளனர். அத்துடன், 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடலையும் தூற்று விரிவுப்படுத்த உள்ளனர். இதனால், கடல்நீரானது நிலப்பகுதியில் உட்புகும் பேரிடர் நிகழ வாய்ப்புள்ளது. எனவே, காட் டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட் டத்தை உடனே கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments