ஆய்வறிஞரும் ஆசிரியரும்!

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதை தமிழர் தலைவர் அவர்கள் மூலம் அடிக்கடி உணர்ந்திருப்போம். எப்போதும் வகை வகையான புத்தகங்களைப் படிப்ப தில் ஆர்வம் கொண்டவரான ஆசிரியர் அவர்கள், அந் நூல்களின் வழி தாம் கண்ட சான்றோர்களைச் சந்திப்பதிலும் உரையாடு வதிலும் பேரார்வம் கொண்டவர். அவர்க ளின் வயதோ, வசதியோ, வேறெதுவுமோ தடையாயிருக்காது. வெளியூர் பயணங் களின்போது பெரியார் பெருந்தொண்டர் களைச் சந்திப்பதில் காட்டும் ஆர்வத்தை, சான்றோர் பெருமக்களைச் சந்திப்பதிலும் காட்டக் கூடியவர். வயதில் முதியவரான உடுமலைப்பேட்டை பெரியவர் வரலாற் றுப் பேராசிரியர் .சுப்ரமணியன் அவர்க ளாக இருந்தாலும், முப்பதைத் தொடாத இளைஞராக இருந்தாலும் இத்தகைய சந்திப்புகளுக்கு முக்கியத்துவம் உண்டு. பயணத்தின் பாதையிலோ, அல்லது நிகழ்ச்சி நடக்கும் ஊரிலோ இருக்கும் பெரு மக்களைச் சந்திக்கும் திட்டத்தை, பகுதித் தோழர்களிடம் முன்கூட்டியே சொல்லி, அதற்கேற்ப நேரத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வார். காலை நேரங்களிலோ, அல் லது மாலையில் கூட்டங்களுக்குச் செல்லும் முன்போ பெரும்பாலான ஊர்களில் இத்த கைய சந்திப்புகள் இருக்கும். அப்படி கடந்த சில ஆண்டுகளில் தென்மாவட்டங்களுக் குச் செல்லும்போது, குறிப்பாக நெல்லை, குமரி மாவட்டங்களுக்குப் பயணத்திட்டம் இருந்தால் அதில் பேராசிரியர் தொ.. அவர்களைச் சந்திக்கும் திட்டமும் பெரும் பாலும் இடம்பெறும். உடல்நிலை நன்கு இருந்த சமயத்தில் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் ஆசிரியரைச் சந்திக்க வருவார். அவர் உடல் நலிவுற்று இருந்த காலத்தில், ஆசிரியர் அவர் வீட்டுக்குச் சென்று சந்திப்பார். இத்தகைய சந்திப்புகள் உடன் செல்வோருக்குக் கிடைக்கும் கூடுதல்  வாய்ப்புகள். சான்றோர் இருவரின் உரையாடலின் சிந்தனைத் தெறிப்புகள் நமக்கு அறிவுச் சாரல்!

ராஜபாளையம், குற்றாலம், நெல்லை, பாளையங்கோட்டை, தஞ்சாவூர் என பல ஊர்களில் தொ. அவர்களும் ஆசிரியர் அவர்களும் சந்தித்து உரையாடியிருக் கிறார்கள். பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் ஆய்வுகள், தேடல்கள், மக்க ளின் பண்பாட்டுப் போக்குகளில் இருந்து பெறப்படும் தகவல்கள் மூலம் கிடைத்த வரலாற்றின் விடுபட்ட கண்ணிகளின் இணைப்புகள், அறியப்படவேண்டிய ஆளுமைகள் தொடர்பான பகிர்வுகள் என செய்திகளும், கருத்துகளும் கரைபுரண்ட படி இருக்கும். இவற்றையெல்லாம் புத்த கங்களில் பதிவு செய்துவிட வேண்டும் என்று எப்போதும் தொ..வைக் கேட்டுக் கொள்வார் ஆசிரியர். புதிய புத்தகங்கள் எல்லாம் வந்தவுடனேயே ஆசிரியர் படித்து முடித்திருப்பார். எனவே அடுத்த புத்தகம் எப்போது என்ற கேள்வி எப் போதும் தொக்கி நிற்கும். நெல்லை தோழர் களைச் சந்திக்கும் போதெல்லாம், குறிப்பாக பொறியாளர் நயினார் போன்றோர் வந்து சந்திக்கும் போதெல்லாம் தொ. அவர் களின் நலம் குறித்த விசாரிப்புகள் இருக்கும் -இருவர் மத்தியிலும். அவர்தம் உடல்நல னைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் எப்போதும் ஆசிரியரின் உள்ளார்ந்த அக் கறை வெளிப்படும்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, வெளி யில் நடமாட்டம் குறைந்திருந்த நிலையில் பாளையங்கோட்டையில் அவரது இல்லத் திற்குச் சென்று சந்தித்தார் தமிழர் தலைவர் அவர்கள். உரையாடல்களின் வழியாகவே பெரிதும் கருத்துகளை வெளிப்படுத்தும் பழக்கமுடையவர் தொ.. அவர்கள் என் பதை அறிந்தவரான ஆசிரியர் அய்யா அவர்கள், ஒரு குரல் பதிவுக் கருவியை (voice recorderஷீ) வாங்கிக் கொடுத்து, “நீங்கள் பேசி பதிவு செய்து தாருங்கள். அதை நாம் தட்டச்சு செய்து பிறகு தொகுத்துக் கொள் ளலாம்என்று அவருக்கு ஊக்கமூட்டினார். தன்னையே சான்றாகக் காட்டி, உடல்நிலை குறித்த அச்சம் வேண்டாம், ஆனால் கவனம் தேவை என்பதையெல்லாம் வலியுறுத்தினார்.

ஆசிரியரின் வழக்கமான பயணங் களின் போது, அவரது நூல்கள் குறித்த உரையாடல் அதிகம் இடம்பெறுவது இயல்பு. பாவலர் அறிவுமதி, பாமரன் உள் ளிட்ட பெரியாரியலாளர்கள் பலரும் தொ. .வுடன் உரையாடுவதற்காகவே பாளை யங்கோட்டை பயணிப்பவர்கள். அங்கு அவரது இல்லத்திலிருந்து, தொ..வின் உரையாடல் வழியாக காலப்பெருவெளி களில் முன்னும் பின்னுமாக அந்தப் பய ணம் தொடரும். கூர் நோக்கிலும், பருந்துப் பார்வையிலும் காட்சிகள் விரியும். அவரது குரலுக்குப் பதில், இனி அவரது நூல்கள் நம்முடன் உரையாடும். இருப்பினும், பெரியாரின் தேவையைப் பண்பாட்டின் வழி கற்க விரும்புவோருக்கு மட்டுமல்ல... பெரியாரியலைப் பரப்பும் தலைவர்வரை தொ..வின் இழப்பு உணரப்படுவது தவிர்க்க முடியாதது.

- சமா.இளவரசன்

Comments