ஒசூரில் காவிகள் விரட்டி அடிப்பு

 


ஒசூர், ஜன.20 ஒசூரில் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலான்ட் உள்ளது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒசூரின் பல்வேறு பகுதியில் இருந்து தொழிற்சாலைக்கு வருவதால் நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில்(ஓம்சக்தி ட்ராவல்ஸ்)பேருந்து இயக்கி தொழிலாளர்களை அழைத்து வருகிறது. ஒப்பந்தம் காலம் முடிந்த நிலையில் வேறு நிறுவனத்திற்க்கு (பர்வீன் ட்ராவல்ஸ்) அந்த வாய்ப்பு வழங்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் போது இஸ்லாம் நிறுவனத்திற்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சொல்லி அகிலபாரத இந்துமகா சபா அமைப்பை சார்ந்த 10 நபர்கள் ஒசூர் சீத்தாராம் மேடு பகுதியில் தொழிலாளர்களை ஏற்றி வந்த பர்வீன் ட்ராவல்ஸ் பேருந்தை வழிமறித்து தொழி லாளர்களை இறங்கிபோகும் படி தகராறு செய்ய அந்த நேரம் வேறுபகுதியில் தொழி லாளர்களை ஏற்றிக் கொண்டு அவ்வழியே வந்த பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் ஒன்று கூடி தகராறு செய்த காவிகளை கேள்விமேல் கேள்வி கேட்டு விரட்டி அடித்தனர்.

மேலும் நிலைமை குறித்து நிர்வாகமும், தொழிற் சங்கமும் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப் பாளரிடம் புகார் அளித்தனர். காவல் துறை கண்காணிப் பாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

 

Comments