‘தைப் பொங்கல்’ வைப்போம்!

வேளாண்மை முதுகெலும்பென் றுரைப்போர் தம்மால்

                வேளாளர் விலாவையே முறிக்கும் வண்ணம்

தாளாண்மை சிறிதுமின்றி தயவு மின்றி

                தன்போக்கில் தருவித்த சட்டம் தன்னால்

பாழாகிப் போயிடுமே வாழ்க்கை யென்று

                பரிதவித்துப் போராட்டம் செய்யும் அந்த

வாளேந்தும் பஞ்சாப்பின் சிங்கங் கள்தாம்

                வெற்றிபெற வாழ்த்தித்'தைப் பொங்கல்' வைப்போம்!

- தமிழேந்தி

Comments