அமெரிக்க அரசின் உயர் பொறுப்பில் திருநங்கையை நியமித்த ஜோ பைடன்

 


வாஷிங்டன், ஜன.20 அமெரிக்க அரசின் சுகாதாரத் துறை துணை செயலாளராக திருநங்கை மருத் துவரை ஜோ பைடன் நியமித் துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு பொருத்தமான தலைவர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்து வருகிறார்.

அந்த வகையில், சுகாதாரத்துறை துணை செயலாளராக மருத்துவர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை ஜோ பைடன் நியமித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்க அரசுத் துறையின் உயர் பொறுப்பு வகிக்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று பெருமையை பெற்றுள்ளார் மருத்துவர் லெவின்.

 

Comments