நன்கொடை

தேனி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரகுநாகநாதன் அவர்களின் 77ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தாதேவி- இரகுநாகநாதன் இணையரின் பெயர்த்தியும் நகரத் தலைவர் பொறியாளர் ரகு.பெரியார் லெனின்-நாகஜோதி இணையரின் மகளுமான யாழினியின் 14ஆம் ஆண்டு பிறந்தநாள் (15.01.2021) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 அளிக்கப்பட்டது.

- - - - -

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் முன்னாள் கழக செயலாளர் எஸ்.பி.துரையரசன் (9.1.2021) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து 'விடுதலை' வளர்ச்சி நிதியாக அவரது இணையர் ராசாத்தியம்மாள் து.செ.கட்பிஸ் மா.கிருட்டிணமூர்த்தியிடம் ரூ.200 வழங்கியுள்ளார்.

Comments