ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·     பிரதமர் மோடியின் திறமையின்மையும், ஆர்.எஸ்.எஸ்.-ன் வெறுப்புச் சித்தாந்தமும் நாட்டிற்கு பெரும் கேடு விளைவித்துள்ளது என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     இந்திய விஞ்ஞான தொழில் நுட்பக் கழகமும், தேசிய கடலாராய்ச்சி நிறுவனமும் இணைந்து சேது சமுத்திரத்தில் உள்ள ஆதம் பாலம் பற்றிய வரலாற்று ஆய்வினை இன்னும் இரண்டு மாதங்களில் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     டில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமித் ஷா நீக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தி டெலிகிராப்:

·             வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ஆம் தேதி விவசாயிகள் நடத்த உத்தேசித்த பேரணியை விவசாய அமைப்புகள் ரத்து செய்துள்ளன.

- குடந்தை கருணா

28.1.2021

Comments