அமெரிக்காவை காக்க பாடுபடுவேன் அதிபர் ஜோ பைடன் உறுதி

வாஷிங்டன்,ஜன.21- புதிய வரலாறு படைப்போம் என அதிபர் ஜோ பைடன் முதல் உரையை தொடங்கினார். பதவி ஏற்ற பின்னர் மக்களிடையே உரையாற்றிய அவர், அரசியல் தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என குறிப்பிட்டார். அமெரிக்க அதிபரின் அலுவலக மான ஓவல் அலுவலகத்தில் ஜோ பைடன் பணியை தொடங்கினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி யேற்ற முதல்நாளில் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்க மீண்டும் இணைவதற்கான உத்தரவை ஜோ பைடன் பிறப்பித்தார்.

அமெரிக்காவில் இன சமத்துவத்தை உறுதி செய்யும் வகையிலான உத்தரவை பைடன் பிறப்பித்தார், அமெரிக்கா வின் பன்னாட்டு கூட்டணிகளை சரிசெய்வோம் எனவும், அமைதி, பாதுகாப்பு, வளத்திற்கான நல்ல நண்பனாக அமெ ரிக்கா விளங்கும் என கூறினார். உள்நாட்டு பயங்கரவாதம், வெள்ளையினவாதம் உள்ளிட்டவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கூறினார். அமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது எனவும், அரசமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவை காக்க பாடுபடப் போகிறேன் என உறுதியளித்தார்.

Comments