தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிச்சயம்

கோவை மக்கள் கிராம சபை கூட்டத்தில் தளபதி மு..ஸ்டாலின் உறுதி

சென்னை, ஜன.3 தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என கோவையில் நடந்த  மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு..ஸ்டாலின் பேசினார்.

 கோவை  மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் ஊராட்சி  பரமேஸ்வரன்பாளையம் கொங்கு திருப்பதி கோயில் மைதானத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை  கூட்டம் 2.1.2021 அன்று காலை நடந்தது. மாவட்ட தி.மு.. பொறுப்பாளர்  சி.ஆர்.ராமச்சந்திரன் வரவேற்றார். இதில், தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின்  பேசியதாவது: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அராஜகம் கோவை  மாவட்டத்தில் நடக்கிறது. இதற்கு யார் காரணம்? என உங்களுக்கு தெரியும்.  உங்கள் ஊர் அமைச்சர்தான் இதற்கு காரணம். நான் வகித்த உள்ளாட்சி துறை  பதவியைத்தான் அவரும் வகித்து வருகிறார். உள்ளாட்சியில் நல்லாட்சி செய்தேன்  நான். அப்படி பெயர் எடுத்தவன் நான். ஆனால், இப்போதுள்ள உள்ளாட்சி துறை  செயல்பாடு குறித்து வெட்கப்படுகிறேன். அந்த அளவுக்கு  கேவலப்படுத்தியுள்ளனர். உள்ளாட்சி துறை, ஊழல்ஆட்சி துறையாக மாறிவிட்டது.

இப்போது  நடந்து கொண்டிருக்கும் இந்த கூட்டத்தை தடுப்பதற்கு என்னவெல்லாமோ திட்டம்  தீட்டினார்கள். அதை முறியடித்து, நம் மாவட்ட பொறுப்பாளர்கள்  வெற்றி கண்டுள்ளனர். கோவையில் நம் தோழர்கள் சமீபத்தில் சில போராட்டம்  நடத்தினார்கள். இதை பொறுக்க முடியாத ஆட்சியாளர்கள், காவல்துறையை ஏவிவிட்டு கைது செய்தனர். இன்னும் பத்து நிமிடத்தில் தி.மு.. தொண்டர்களை விடுவிக்கவில்லை என்றால், அடுத்த விமானத்தில் நான் கோவைக்கு வருவேன் என நம்  நிர்வாகிகளிடம் டெலிபோனில் பேசினேன். இதை உளவுத்துறை மோப்பம் பிடித்து,  ஆட்சியாளர்களுக்கு தெரிவித்துவிட்டனர். இந்த மிரட்டலுக்கு பயந்து நம் தொண்டர்களை உடனே விடுவித்துவிட்டனர். .தி.மு.. ஆட்சியின் ஊழலை மக்களிடம் நாம் எடுத்து சொல்லிவிடக்கூடாது என திட்டம் போட்டு,  இக்கூட்டத்துக்கு தடை விதிக்கின்றனர். எங்களை கைது செய்யலாம். ஆனால்,  மக்கள் உணர்வை தடுத்து விட முடியாது. அந்த எழுச்சியைத்தான் இன்று  பார்க்கிறேன் என அவர் கூறினார்.

Comments