டில்லி விவசாயிகள் போராட்டம் கலவரத்தைத் தூண்டியவர்கள் யார்?

இதோ ஆதாரங்கள்!!

டில்லியில் விவசாயிகள் முகாம் பகுதிகளில் கற்களைக் குவியல் குவியலாக இறக்கி வைத்திருக்கும் கலவரக்காரர்கள்.

 புதுடில்லி, ஜன. 30  டில்லியில் சுமார் 65 நாள்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் தொடர் போராட் டம் நடத்தி வருகின்றனர்அரசு பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் ஒரு முடிவு எட்டப்படாததால் விவசாயிகள் குடியரசு தினத்தன்று ஒரு டிராக்டர் பேரணியை நடத்தினர்.   அப்போது கலவரக்காரர்கள்  புகுந்து கலவரம் செய்து செங்கோட்டையில் பஞ்சாபிய, சீக்கிய மதக்கொடியை ஏற்றியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்த போதும் மத்திய அரசு விவசாயிகள் தங்கி உள்ள எல்லைப் பகுதிகளை மூடி உள்ளனர்.  சிங்கு எல்லையில் உள்ளூர் மக்கள் என்னும் பெயரில் ஒரு கூட்டம் வந்து அங்குள்ள விவசாயிகளின் கூடாரங் களைச் சூறையாடி விவசாயிகளை இடத்தை விட்டு காலி செய்யுமாறு மிரட்டி உள்ளனர்.  மேலும் இந்திய தேசியக் கொடியை விவசாயிகள் அவமதித்ததாகவும் குற்றம் சுமத்தினர்.

உள்ளூர் மக்களல்ல!

உள்ளூர் மக்கள் எனப் பல செய்தி ஊடகங்கள் சொல்லும் இந்த கலவரக் கும்பலில் பலர் தேசியக் கொடியுடன் வந்து விவசாயிகளை மிரட்டும் நிழற் படங்கள் மற்றும் காணொலிகள் வெளியாகி உள்ளன.  இந்தக் கூட்டத் தில் ஒருவர் நீலம், வெள்ளை மற்றும் பச்சை கோடுகள் அணிந்த சட்டையு டன்மூவண்ணக் கொடியை ஏந்தியபடி காணப்படுகிறார்.  கும்பலில் முதல் வரிசையில் உள்ள இவரை சில சமூக வலை தள பயன்பாட்டாளர்கள் அமன் தபாஸ் என அடையாளம் காட்டியுள்ளனர்.

அமன் தபாஸ் என்பவர் வடகிழக்கு டில்லியில் சமூக ஆர்வலர் எனக் கூறிக் கொள்ளும் நபர் ஆவார். இவருடைய முகநூல் பக்கத்தில் தம்மை அமன் குமார், சமூகத் தொண்டர் எனக் கூறிக் கொண்டுள்ளார். இவரது மனைவி அஞ்சு தேவி என்பவர் உள் ளூர் பாஜக தலைவரும், மாநகராட்சி உறுப்பினரும் ஆவார்.

அமன்தபாஸ் பல பாஜக கூட்டங் களிலும் பங்கு  பெற்றுள்ளார்.  இவ ரும் அஞ்சு தேவியும் 2017 ஆம் ஆண் டில் பாஜகவில் இணைந்துள்ளனர்.  அதற்கு முன்பு இருவரும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்துள்ளனர்.  சமீபத்தில் அமன் தாம் அமித்ஷாவுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  சிங்கு எல்லையில் இருந்து சுமார் 15 கிமீ தூரத்தில் உள்ள பூத் குர்த் என்னும் பகுதியில் வசிப்பதாக அஞ்சு தேவி சொல்லி உள்ளார்.

பா...காரர்களே!

சிங்கு எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக அமன் விவசாயிகளை காலி செய்யச் சொல்லி உள் ளார். உண்மையில் சிங்கு எல்லையின் போக்குவரத்துத் தடையால் பூத் குர்த் எவ்விதத்திலும் பாதிக்காது என்பதே உண்மையாகும்.  ஏனென்றால் பூத் குர்த் 15 கிமீ தள்ளி இருப்பதுடன் அந்தப் பகுதியை அடைய சிங்கு எல்லை வழியாகச் செல்ல வேண்டிய தில்லை என்பதும் குறிப்பிடத்தக்க தாகும்.

கூட்டத்தில் தென்பட்ட மற்றொரு பாஜக தொண்டரான கிஷன் தபாஸ் என்பவர் சிங்கு எல்லையில் நடந்த நிகழ்வு குறித்து முகநூலில் பதிவிட் டுள்ளார்.  அந்தப் பதிவில் அவர் தம்மை சிங்கு எல்லையில் வசிக்கும் உள்ளூர் மக்களில் ஒருவராகச் சொல் லிக் கொண்டுள்ளார். அவர் அந்தப் போராட்டத்தில் எல்லையைக் காலி செய் என கூச்சல் போடும் காணொ லிகளை வெளியிட்டுள்ளார்.  இதில் அவருடன் அமன் தபாஸ் தென்பட் டதாகக் கூறப்படுகிறது.   மற்றொரு காணொலியிலும் அமன் மற்றும் கிஷன் ஆகிய இருவரும் ஒன்றாக உள்ளனர்.

கிஷன் கடந்த ஆண்டு அமன் மனைவியுடன் பூல் குர்த் பாஜக அலு வலகத்தில் தாம் உள்ள நிழற்படத்தை வெளியிட்டதுடன் அவருக்கு வாக் களிக்க வேண்டும் என உள்ளூர் வாசி யான தாம் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் வெளியூர் பாஜக தொண்டர்கள் பலர் இந்த சிங்கு எல்லையில் உள்ளூர் மக்கள் என்னும் பெயரில் கூடி உள்ளதும், அவர்கள் விவசாயிகளை மிரட்டுவதும் தெரிய வந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.,

கற்கள் குவிப்பு!

நிழற்படங்களில் பலர் முகமூடி களை அணிந்து கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடக்கு டில்லி கலவரத்திற்கு சில நாட்களுக்கு முன்பு இரண்டு லாரிகளில் கற்களை இறக் கியுள்ளனர். இப்படம் சமூக ஊட கங்களில் வெளியானது, இந்தக் கற்களைக் கொண்டு ஹிந்துத்துவ அமைப்பினர் கவண் போன்ற ஒரு செயற்கை அமைப்பை உருவாக்கி நீண்ட தூரம் வரை கற்களைக் கொண்டு இஸ்லாமிய குடியிருப்பின் மீது தாக்கினர்.

இம்முறையும் இதேபோல் விவசாயிகள் போராட்டம் நடக்கும் இடத் திற்கு அருகில் கற்களை டில்லி மாநகராட்சி வாகனம் ஒன்று வந்து இறக்கியுள்ளது, அங்கு சாலை வேலை களோ எந்த வேலையுமே நடக்க வில்லை. அப்படி இருக்க, அங்கே எதற்காக கற்களை இறக்கியுள்ளனர் என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்பகுதி மக்களில் சிலர் கூறும் போது, ‘‘கடந்த ஆண்டு டில்லி கல வரத்தின் போது உத்தரப்பிரதேசத்தில் இருந்து பல குண்டர்களை பாஜக வினர் வரவழைத்தனர். அதே போல்  தற்போதும் எங்கள் பகுதியிலும் சில நாட்களாக புதிய நபர்கள் சுற்றித் திரிந்தனர். விவசாயிகளைத் தாக்கிய வர்களில் யாருமே எங்கள் பகுதியினர் அல்ல'' என்று கூறியுள்ளனர்.

Comments