'மிஸ்டு காலில்' உறுப்பினர் சேர்த்த பாஜக மோடி காப்பீடு திட்டத்தின் பெயரில் கட்சியின் உறுப்பினராக சேர்ப்பதா?

பா...வின் மோசடிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

இளையான்குடி, ஜன.6- இளையான்குடி பகுதியில் பிரதமர் மோடி காப்பீடு திட்டம் என்ற பெயரில், இணையத்தில் பா... உறுப்பினர் சேர்க்கைக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைக்கிராமம், வடக்கு சாலைக் கிராமம், குயவர்பாளையம் பகுதி யில் கடந்த ஒரு வாரமாக பா... கட்சியினர், பிரதமர் மோடி மருத்துவ காப்பீடு திட்டத்தில் பொதுமக்களை இணைப்பதாகக் கூறிக்கொண்டு பா... வின் உறுப்பினராக சேர்க்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (5.1.2021) பா...வைச் சேர்ந்த லதா என்பவர், அப்பகுதிகளில் இணைய வழி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். இதற்காக குடும்ப அட்டை, ஆதார் எண் சேகரிக்கப்பட்டு  இணையம்மூலம் பதிந்தவுடன், சம்பந்தப்பட்ட பொதுமக் களின் கைப்பேசிக்குஓடிபிஎண் வருகிறது.

அந்த ஓடிபி எண்ணை பதிந்தவுடன் பொதுமக்களின் எண்ணிற்கு வரும் குறுந்தகவலில், ‘நீங்கள் பா...வில் ஏற்கெனவே உறுப்பினராக உள்ளீர்கள். உங்களுடைய விவரங்களை கீழ்க்கண்ட இணைப்பில் பதிவு செய்யுங்கள்என ஓர் இணைப்பும்,  உங்களுடைய பெயர், முகவரி, உள்ளிட்டவைகளை குறுஞ்செய்தியில் அளிக்கவும்என ஓர் எண்ணும் வருகிறது. ஆனால், மோடி காப்பீடு என்றோ, மருத்துவம் மற்றும் அதற்கான விவரங்களோ அந்த குறுஞ்செய்தியில் இல்லை.

அதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பா... ஒன்றியச் செயலாளர் ராஜபிரதீப், திமுக ஒன்றியச் செயலாளர் செல்வராசன் ஆகியோர் கட்சியினருடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு திமுக மற்றும் பா...வினருக்கு இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சாலைக்கிராமம் காவல்துறையினர் இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image